காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் நலன்புரி நன்மைகள் சபையின் மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை தொடர்பான கடமைகள் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
அந்தவகையில் 2023.06.20 ஆந் திகதி வெளியிடப்பட்ட நலன்புரி நன்மைகள் பயனாளிகளின் பெயர்ப் பட்டியலுக்கமைவாக பொது மக்களிடமிருந்து மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை கள் கோரப்பட்டதற்கமைவாக இணையவழி ஊடாக 2023.07.05 ஆந் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் 3813 மேன்முறையீடுகளும், 111 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் இதுவரை மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை களை மேற்கொள்ளாத வர்கள் 2023.07.10 ஆந் திகதிக்கு முன்னர் www.iwms.wbb.gov.lk,
https:/ iwms.wbb.gov.lk/ complaint எனும் இணையத்தள முகவரியினூடாக பதிவிட முடியும்.
இந் நடவடிக்கையினை இலகுபடுத்தும் பொருட்டு கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நலன்புரி நன்மைகள் கடமையினை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



















