காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் பிரதேச கலாசார அதிகாரசபை மற்றும்காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் பிரதேச கலாசார அதிகாரசபை மற்றும்பிரதேச கலாசார பேரவையின் கலாசார விழாவினை முன்னிட்டு 2019 ஆண்டுக்கான'ஸம்ஸம்' கலாசார சிறப்பு மலரினை ஏழாவது இதழாக 31-01-2020ம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் வெளியிடப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன்கருதி அலைபேசி மென்பொருள் Mobile Application ஒன்று 31-01-2020ம் திகதி பிரதேச கலாசார நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் வெளியிடப்படவுள்ளது. 

இம் மென்பொருள் மூலமாக பிரதேச செயலக அடிப்படைத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதுடன் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் விபரங்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் மிகமுக்கியமாக பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் சேவைகள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முடிவதுடன் அதற்கு தேவையான ஆவணங்களை நேர விரயம் இன்றி இலகுவில் தயாரித்துக் கொள்ள முடிவதுடன் அச்சேவை தொடர்பான உத்தியோகத்தர்களின் விபரங்களையும் இந்ந மென்பொருளிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

இம் மென்பொருள் முழுமையாக பிரதேச செயலக வழங்களைக் கொண்டு எதுவித செலவும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இம் மென்பொருளை பிரதானமாக காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் தகவல் தொழிநுட்ப முகாமையாளருமாகிய (LGM IT Admin)  AGM. பஹ்மி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் உதவியாளர்களாக இம்மொருள் உருவாக்கத்தில்  பாத்திமா சஹாமா, பாத்திமா பாழிலா மற்றும் சிஹ்மா நுஸ்ரி ஆகியோர் கடமையாற்றினர். இம்மொன்பொருள் உருவாக்கத்தில் பாடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகம் சார்பாக எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 

இம்மென்பொருள் தற்போது ....... தொலைபேசிகளில் மாத்திரம் இயங்குவதற்கு தற்போது வடிவமைக்கப்படடுள்ளது. விரைவில் ஏனை ஐபோன் தெலைபேசிகளிலும் இயங்குவதற்கு வடிவமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..

தற்போது இம்மென்பொருளினை எமது பிரதேச செயலக இணையதளத்தில் பின்வரும் இணைப்பில் தரவிரக்கிக் கொள்ள முடியும்.

Download Here : DSKAPP2020

 

    

 

இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் காத்தான்குடி பிரசே செயலகம் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தினை பெற்று எமதூருக்கும் மாவட்டத்திற்கும் பெறுமை சேர்த்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

இவ்வெற்றியினை கொண்டாடும் நிகழ்வு கடந்த 02.01.2019ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் இவ்வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது.  மேலும் எமது அடுத்த இலக்கான முதலாமிடத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் முழு மூச்சுடன் செயற்பட வேண்டுமென பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தொழிநுட்பத்தினை அமுல்படுத்தும் ஆண்டாக 2018ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய  2019ம் ஆண்டிற்கான முதலாம் திகதி அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த 02-01-2019ம் திகதி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அரச உறுதி மொழி பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தரினாலும் ஏற்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொது மக்கள் பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோத்தர்களாகிய நாம் அரச கடமைகளை வினைத்திறனாகவும் பயனுறுதிமிக்கதாகவும் பொதுமக்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளரினால் அறிவுருத்தப்பட்டது. மேலும் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தினராலும் அறிவுரைகள் வழங்கப்பட்டு அந்நிகழ்வு இனிதே முடிவுற்றது.

News & Events

31
Jan2020
ஸம் ஸம் சிறப்பு மலர் வெளியீடு - 2019 பிரதேச கலை இலக்கிய விழா-2020

ஸம் ஸம் சிறப்பு மலர் வெளியீடு - 2019 பிரதேச கலை இலக்கிய விழா-2020

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் பிரதேச கலாசார...

31
Jan2020
காத்தான்குடி பிரதேச செயலக Mobile Application வெளியீடு

காத்தான்குடி பிரதேச செயலக Mobile Application வெளியீடு

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன்கருதி அலைபேசி மென்பொருள்...

News & Events

31
Jan2020
ஸம் ஸம் சிறப்பு மலர் வெளியீடு - 2019 பிரதேச கலை இலக்கிய விழா-2020

ஸம் ஸம் சிறப்பு மலர் வெளியீடு - 2019 பிரதேச கலை இலக்கிய விழா-2020

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் பிரதேச கலாசார...

31
Jan2020
காத்தான்குடி பிரதேச செயலக Mobile Application வெளியீடு

காத்தான்குடி பிரதேச செயலக Mobile Application வெளியீடு

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன்கருதி அலைபேசி மென்பொருள்...

Scroll To Top