No Drugs நாங்கள் Youth "போதைப் பொருள் அற்ற இளைஞர் தலைமுறை " எனும் தொனிப்பொருளில் போதைப் பொருள் தடுப்பிற்காக இளைஞர் தலைவர்களுக்கான முதலாம் நாள் விழிப்புணர்வு செயலமர்வானது 2023.11.12 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கிழமை
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் இளைஞர் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக போதை முற்தடுப்பு உத்தியோகத்தர்களான P.சந்திர காந்தன், S.கோவிந்தராசா, WDO திருமதி. URB. றஸ்மின், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவின் பயிற்றுவிப்பாளர் செல்வி.S.சுஜிவா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் தலைவர்களுக்கு
வளவாளர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.



காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது 2023.11.09 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்ரி அவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரால் கணக்குக்கிளை, காணிக்கிளை, திட்டமிடல் கிளை, மற்றும் பதிவாளர் கிளை , சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு ஆகிய பிரிவுகள் தொடர்பான அறிக்கைகள் விளக்க காட்சிகள்(Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஆலோசனைகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் கிளைத்தலைவர்கள், பதவி நிலை உதவியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கணக்காளர் செல்வி.கே.சித்ரா அவர்களின் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.



பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலணியினரின் பிரதேசமட்ட திட்டமிடல் 2ம் அமர்வு பயிற்சி பட்டறையானது 2023.11.06 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் IWARE நிறுவனத்தின் பங்களிப்புடன் காத்தான்குடி Beachway hotelல் இடம் பெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் திருமதி. சுபத்திரா யோகசிங்கம் மற்றும் A.சொர்ணலிங்கம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் காத்தான்குடியில் இயங்கி வருகின்ற GBV Forum இன் செயற்பாடுகளை நெறிப்படுத்தி செயலணிக்கான Terms of Reference ஐ வரைவதன் மூலம் மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்தது பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை கையாளும் செயற்திறனான பொறிமுறைகளை உருவாக்குதல் தொடர்பில் பல்வேறு தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, காழி நீதிபதி, சமுர்த்தி தலைமை முகாமையாளர், கிராம உத்தியோகத்தர் நிர்வாக உத்தியோகத்தர், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர், மத்தியஸ்த சபை தவிசாளர், பொலிஸ் உத்தியோகத்தர, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,ஊடகவியலாளர் கள் என பலரும் கலந்து கொன்டனர்.









காத்தான்குடி மகளிர் மகா சங்க கூட்டம் மற்றும் ஊதியமற்ற பராமரிப்பு பணிப்பகுப்பாய்வு தொடர்பான பயிற்சிப் பட்டறையானது 2023.11.09 ஆந் திகதி வியாழக்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில் மகளிர் மகா சங்க உறுப்பினர்கள் 45 பேர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி நெறியில் திருமதி.யூ.ஆர்
வீ.றஸ்மின்(WDO) மற்றும் திருமதி.பீ.கௌரீசன் (CA) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் ஊதியமற்ற பராமரிப்பு வேலைகள் பற்றிய பகுப்பாய்வு, பால்நிலை வகிபங்கு தொடர்பான பயிற்சிகளும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் செயற்பாடுகள் பற்றிய தெளிவவூட்டல்களும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திருமதி.எச்.வீ.எம்.சில்மி தாஜுதீன் (WDFA), திருமதி.யூ.சுவேந்திரன்(CRPO), மற்றும் எஸ்.கோவிந்தராசா, பீ.சந்திரகாந்தன் ( Drugs prevention), திருமதி.கிருத்திகா பகலவன் ( DO) ஆகியோர் கலந்து கொண்டனர்.







காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கா ஏழாவது பிரதேச தினக் கூட்டமானது ( 07) ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் கடந்த பிரதேச தினக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட 6ம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்ன லெப்பை மாவத்தையிலுள்ள நகை உருக்கும் பட்டறையினால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக பிரதேச சுற்றாடல் அதிகாரியிடம் (மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை) நகை உருக்கும் பட்டறை அமைப்பதற்காக ஏன் அனுமதி வழங்கப்பட்டது சம்பந்தமாக பிரதேச செயலாளரால் வினவப்பட்டது.
மேலும் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச செயலாளரால் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பாக (2024-2028) அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய திட்டங்கள், திணைக்களத்தினால் வழங்கப்பட்ட Proposal தொடர்பான Summery விளக்க காட்சிகள் (Presentation) மூலம் DCO வினால் விளக்கிக் காட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜாநிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர் செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
























