கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது  (11) ஆந் திங்கட்கிழமை திகதி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக் கூட்டத்தில் சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்டோரில் வங்கிக் கணக்குகளை திறந்தவர்களின் எண்ணிக்கை,  திறக்காதவர்களின் எண்ணிக்கை என்பவற்றை கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரீதியாக ஆராயப்பட்டு திறக்கப்படாமை க்கான  காரணத்தை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்தாலோசித்து தீர்மானங்களை  மேற்கொள்ளுமாறு உதவிப் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
 மேலும் சமூக நலன்புரி நன்மைகள் தொடர்பான மேன்முறையீடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.அதற்கான சரியான தகவல்களை உத்தியோகத்தர்கள் வழங்குமாறும் உதவிப் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
 
 2023.09.12 ஆந் திகதி சமுர்த்தியினால் தெரிவு செய்யப்பட்ட 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு மற்றும்  வாக்குரிமை, கடமைகள், தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வும் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து HRDA, Project manager, DMC, RDO, Forien Do, மற்றும் WDO,ECDO, Environment Do, CULTUREL DO, கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்,DO (மத்தியஸ்தம்) ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக உதவிப் பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
Aug2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
Jul2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top