உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு தொற்றாநோய்கள் மற்றும் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது 05.12.2023,06.12.2023 ஆந் திகதிகளில் மட்/மம/மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் மட்/மம/மீராபாலிகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம் பெற்றது.
மட்/மம/மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் 2023.12.06 இடம் பெற்ற செயலமர்வானது பொறுப்பாசிரியர் முபீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் கா.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தொற்றா நோய்களுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி E.உதயகுமார், பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் , மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் SPHI,PHI, தொற்றா நோய்கள் மற்றும் நீரிழிவு தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















