சுனாமி திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடலானது 2022.02.28 ஆந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.குகந்தினி கோபாலசிங்கம் அவர்களது ஏற்பாட்டில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அவர்கள் சுனாமி திட்டம் தயாரித்தல் தொடர்பாகவும், அதன் அவசியம் தொடர்பாகவும், காத்தான்குடியில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புக்கள் இருப்பதனால் இத்திட்டம் மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் திரு.எஸ்.சயந்தன், திரு.எம்.சகீல் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், 167A, 167B, 167C, 167D, 166A, 165B, 162, 162A ஆகிய பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

















