காத்தான்குடி பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு செயலணிக் கூட்டமானது 2023.05.15 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான வெவ்வேறு தலைப்புகளில் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி (TOT) வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் நகரசபையினூடாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட செயற்றிட்டம் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்ற விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போது சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் இக் கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.
பிரதேச செயலகத்திற்காக வழங்கப்பட்ட திட்டத்தின் செயற்பாடுகள் கிரமமான முறையில் நடைபெற்று வருகின்றது என்ற விடயத்தை பிரதேச செயலாளர் குறிப்பிட்டதுடன் சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இச் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும்,
பிரதேச செயலக கலாசார பேரவையினூடாக மாணவர்களுக்கான செயற்பாட்டுத் திட்டங்கள் கிரமமான முறையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இக் கூட்டத்திற்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர், மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்,HRDO,நகரசபை உத்தியோகத்தர்,Iware பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள்,
WDO, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















