முதியோர் செயலகத்தினால் முதியோர்களுக்கான ஆரோக்கியா மருத்துவ கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கான ஆரோக்கியா மருத்துவ நிதிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வானது 2023.08.17 ஆந் திகதி வியாழக்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களினால் சமூக பராமரிப்பு நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இக் கொடுப்பனவுவானது இருதய சத்திர சிகிச்சையினைப் பெற்றுக் கொண்ட 4 முதியவர்களுக்கு 25000/= கொடுப்பனவாக முதியோர் செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ராஜ்மோகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கனாதி மபாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். 






















