கமத்தொழில் மற்றும் காப்புறுதிச் சபையினால் குறைந்த கட்டணத்திலான மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்புறுதிச் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 21.08.2023 பிரதேச செயலாளர் யூ.உதயசிரீதர் அவர்களினால் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபை ( AAIB)யினால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தினூடாக இலகுவாக வாகனங்களுக்கான காப்புறுதிகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்நிகழ்வில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபையின் உதவிப்பணிப்பாளர் A கவன் தீசன் அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

















