பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாக அஸ்வசும வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக சமுர்த்தி வேலைத்திட்டத்தினை நடாத்திச் செல்லுதல் தொடர்பாக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு 2023.08.17 வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வின் வளவாளராக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி வேலைத்திட்டத்துடன் இனணைந்ததாக அஸ்வசும வேலைத்திட்டத்தினை நடாத்திச் செல்லுதல் தொடர்பாகவும், சமுர்த்தி திட்டம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, அதன் வளர்ச்சி, மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் ஏற்படும் மாற்றங்கள், என்பது தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
மேலும் காத்தான்குடி வங்கி முகாமையாளரினால் சமுர்த்தி திட்டம் தொடர்ந்து இயங்கிய வண்ணம் இருக்குமெனவும் அஸ்வசும பற்றி மேலதிக விளக்கங்களையும், இக் கூட்டத்தினால் மக்கள் அடையும் பயன்கள் பற்றி மக்களிடம் வினவப்பட்டதுடன் மக்களது சந்தேகங்களுக்கான விளக்கமளிக்கப்பட்டது.
இச்செயலமர்விற்கு சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

















