பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால்
"சிசுபல" வேலைத் திட்டத்தின் கீழ் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு 2023.09.12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வானது காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர்களின் சிறார்களுக்கு ஒருவருக்கு ரூபா 1776 /= பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்
பிரதேச செயலாளரால் மிகவும் சுவாரசியமானதும் அறிவுபூர்வமானதுமான சொற்பொழிவுகளை சிறார்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 165-6, 164C -2, 165A-3, 166-12, 167E-9,167B-24, 167D-17, 162A-36, 167C -38, 162-10, 167A-42, 167-15, 166A-15, 164A-10, 165B-2, 164B-6, 162B-12, 164-7 மொத்தமாக 266 சிறார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், அதிபர்கள், சமுதாய அடிப்படை அமைப்பிற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் வலய உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















