காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்திக் கட்டமைத்தல் தொடர்பாக போக்குவரத்து வசதிகள் வழங்குவோருடனான கூட்டம் 2023.09.18 ஆந் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலாளர் அறையில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தின் போது சுற்றுலாத் துறையில் வாகன சாரதிகளின் பங்களிப்பு, போக்குவரத்தின் போது சாரதிகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் போக்குவரத்துக்கு தடையாக காணப்படும் விடயங்களை சீர்படுத்துவதற்காக Deputy Inspector General of Police, மற்றும் Road Development Department என்பவற்றிற்கு அறிவிப்புக்களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் , வேன் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் , பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















