மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசனைக் குழுவினால் வரையப்பட்டுள்ள 05 ஆண்டுத்திட்டத்தினை (2024-2028) சரி பார்த்து சிபாரிசு செய்வதற்கான கூட்டம் (16) ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தின் போது திணைக்களங்களின் மாவட்ட தலைமைகளால் வழங்கப்பட்ட உள்ளீடுகளை மையப்படுத்தி மேற்படி வரைபுகள் அவற்றிற்குரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.இத் திட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களில் மாற்றம் செய்ய வேண்டிய திட்டங்கள், உள்வாங்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் நீக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பிரதேச செயலாளரால் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களது எழுத்து மூலமான முன்மொழிவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் சில திணைக்களங்கள் தங்களது திட்டங்களின் மாற்றங்கள் தொடர்பாகவும் எதிர் காலத்திட்டங்கள், சேர்க்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கூறப்பட்டதுடன் நீக்கப்பட்டுள்ள விடயத்திட்டங்களும் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு உதவித் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















