ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
'திரியப்பியச' வீடு கையளிக்கும் நிகழ்வு -2022
காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் முதியோர் தேசிய செயலகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 'திரியப்பியச' வீடானது 2022.02.02 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி முதலாம் குறிச்சி 167E கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் முதியோர் அலிமா உம்மாவிற்கு 3 இலட்சம் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடு கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப்பரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன், 167E கிராம உத்தியோகத்தர் திரு.ஏ.ஜீ.ஏ.றசாக், முதியோர் மேம்பாட்டு உதவியாளர் திருமதி.ஹனாதி மபாஸ், ஸம் ஸம் முதியோர் அமைப்பின் தலைவர் திரு.எம்.ஹிஸைன், EDO திரு.எஸ்.சிவாகரன், ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



YMCA நிறுவனத்தினால் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு -2022
YMCA நிறுவனத்தினால் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.26 ஆந் திகதி புதன் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன் அவர்கள் தலைமையில் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வானது முற்றாக இயலாத 03 பிள்ளைகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவாக இரண்டு பயனாளிகளுக்கு ரூபா 3000/= வீதம் ரூபா 6000/= உம் ஒருவருக்கு ரூபா 3500/= உம் மொத்தமாக ரூபா 9500/= உதவிப்பிரதேச செயலாளரால் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ராதிகா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
74 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சிரமதானமும் ,மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் - 2022
74 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு 2022.02.01 அன்று 167A கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொது மக்களின் பங்களிப்புடன் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்கள் அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.இவ்நிகழ்வின் போது மாதுளை, அம்ரலா ஆகிய பழமரக்கன்றுகளும் கறுவா கன்றும் 167A கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பொது மக்கள் பங்களிப்புடன் நடப்பட்டது.;இந்நிகழ்வினை 167A கிராம உத்தியோகத்தர். திருமதி.எம்.ஐ.சித்தி நஸிமா, அவர்களுடன் இணைந்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.மு.டு.ஆ.றீஹான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஊ.ஆ.அனிஸா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.யு.யுனுபா ஆகியோர் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



காத்தான்குடியில் நாடகப்பயிற்சிப்பட்டறை -2022
காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகப்பயிற்சி பட்டறையானது 2022.01.27 ஆந் திகதி முற்பகல் 8.30 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்களது தலைமையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி பட்டறையானது மாணவர்கள், கலை இலக்கிய கழக உறுப்பினர்களுக்கு (கலைஞர்கள்) நாடகம், இலக்கியம் தொடர்பிலான விரிவுரையினை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்களால் பயன் பெறும் வகையில் ஆற்றுப்படுத்தலுடனான நாடகப்பயிற்சிப்பட்டறை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு.ஏ.ஜே.ஜவாஹிர், கலாசார உத்தியோகத்தர் திரு.எம்.ஜ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா, உதவி கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சர்மிலா, கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர் திரு.எம்.ஆர்.எம்.என்.ஹில்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.நுஹா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.சுஹைலா காலிதீன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
























