ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான அனர்த்த அபாயக் குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் கற்கை நெறியின் ஆரம்ப நாள் நிகழ்வு
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டிலும் காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரணப் பிரிவின் ஒழுங்கு படுத்தலிலும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் கற்கை நெறியின் ஆரம்ப நாள் நிகழ்வு 2023.11.21 ஆந் திகதி மாவட்ட அனர்த்த பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் அவர்களது தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கற்கை நெறியில் மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று ஆரையம்பதி, மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 90 இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்
இக் கற்கை நெறியில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், அவசர கால நிலைமைகளில் எவ்வாறு செயற்படுதல் வேண்டும், நீச்சல் பயிற்சி மற்றும் முதலுதவிப் பயிற்சிகள் நேரடியாகவும் Zoom மூலமாகவும் இடம்பெறவுள்ளதுடன் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக , காத்தான்குடி பிரதேச செயலாளர், மண்முனை வடக்கு மற்றும் மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலாளர்கள், காத்தான்குடி நகரசபை செயலாளர், மற்றும்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.







" சுரக்கும் பவ"
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வி அமைச்சு இணைந்து செயற்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்களுள் ஒன்றான " சுரக்கும் பவ" எனும் திட்டத்தின் கீழ் பாடசாலையில் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கி அதன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட மட்/மம/காத்தான்குடி மத்திய கல்லூரி,மட்/மம/ நூறாணியா வித்தியாலயம், மட்/மம/மெத்தைப் பள்ளி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை அமைத்து செயற்படுத்துவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் காகிதாதிகள் மற்றும் உபகரணங்கள் 2023.11.14 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்விற்கு திருமதி.நிஸா றியாஸ் (DCPO), திருமதி.பீ.கௌரீசன் (CA) ஆகியோர் கலந்து கொண்டனர்.



நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
நவம்பர் 17 நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் வழிகாட்டலின் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடனும் மாணவர்களுக்கு நீரிழிவு தொடர்பாக விசேட விழிப்புணர்வு செயலமர்வு 2023.11.17 ஆந் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் G.சுகுணன், தொற்றா நோய்களுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி E. உதயகுமார் , காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி UL . நஸீர்தீன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,
SPHI, PHI , காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





சிரேஸ்ட பிரஜைகளுக்கான கட்டில், மெத்தைகள் வழங்குதல் - 2023
முதியோர் செயலகத்தினால் 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஸ்ட பிரஜைகளுக்கு கட்டில், மெத்தைகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் (15) புதன்கிழமை வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த சிரேஸ்ட பிரஜைகளுக்கு கட்டில் மெத்தைகள் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் 125000/= நிதி ஒதுக்கீட்டின் கீழ் 8 பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது . இதில் 7 பயனாளிகளுக்கு கட்டில் மற்றும் மெத்தையும் ஒரு பயனாளிக்கு மெத்தை மற்றும் தலையணையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்ரா , சமூக சேவை உத்தியோகத்தர் பீ.ராஜ்மோகன் மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எம்.எச்.எம்.ஹனாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.




























