சுதந்திர தினக் கொண்டாட்டமானது 2022.02.04 ஆந் திகதி முற்பகல் 8.19 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீர்த்த இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து 02 நிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் இறைவணக்கமும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் கொவிட் 19 கொரோணா தொற்று காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகியிருக்கும் இக்கால கட்டத்தில் அரச உத்தியோகத்தர்களாகிய நாங்கள் மேம்பட்ட சேவையினை வழங்குவதன் மூலம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன் அவர்களது ஒழுங்கமைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர்  திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் , கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

YMCA நிறுவனத்தினால் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.26 ஆந் திகதி புதன் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன் அவர்கள் தலைமையில் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வானது முற்றாக இயலாத 03 பிள்ளைகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவாக இரண்டு பயனாளிகளுக்கு ரூபா 3000/= வீதம் ரூபா 6000/= உம் ஒருவருக்கு ரூபா 3500/= உம் மொத்தமாக ரூபா 9500/=  உதவிப்பிரதேச செயலாளரால் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ராதிகா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகப்பயிற்சி பட்டறையானது 2022.01.27 ஆந் திகதி முற்பகல் 8.30 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்களது தலைமையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறையானது மாணவர்கள், கலை இலக்கிய கழக உறுப்பினர்களுக்கு (கலைஞர்கள்) நாடகம், இலக்கியம் தொடர்பிலான விரிவுரையினை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்களால் பயன் பெறும் வகையில் ஆற்றுப்படுத்தலுடனான நாடகப்பயிற்சிப்பட்டறை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு.ஏ.ஜே.ஜவாஹிர், கலாசார உத்தியோகத்தர் திரு.எம்.ஜ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா, உதவி கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சர்மிலா, கலாசார  மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர் திரு.எம்.ஆர்.எம்.என்.ஹில்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.நுஹா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.சுஹைலா காலிதீன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

74 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு 2022.02.01 அன்று 167A கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொது மக்களின் பங்களிப்புடன்  இடம் பெற்றன.

இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்கள் அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.இவ்நிகழ்வின் போது  மாதுளை, அம்ரலா ஆகிய பழமரக்கன்றுகளும் கறுவா கன்றும் 167A கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பொது மக்கள் பங்களிப்புடன் நடப்பட்டது.;இந்நிகழ்வினை 167A கிராம உத்தியோகத்தர். திருமதி.எம்.ஐ.சித்தி நஸிமா, அவர்களுடன் இணைந்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.மு.டு.ஆ.றீஹான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஊ.ஆ.அனிஸா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.யு.யுனுபா ஆகியோர் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக சேவைகள் அமைச்சினால் காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கான கல்விக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.26 ஆந் திகதி புதன் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன் அவர்கள் தலைமையில் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வானது பாடசாலை செல்கின்ற அங்கவீனமுற்ற 2 பிள்ளைகளுக்கு கல்விக்கொடுப்பனவாக ஒருவருக்கு ரூபா 10,000 வீதம் ரூபா 20,000 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் உதவிப்பிரதேச செயலாளரால் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ராதிகா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top