தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வானது 2023.03.15 ஆந் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.MS.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் 50 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக (Officer's Transparency International) திருமதி.பிரியா போல் ராஜ் மற்றும் திருமதி.ஜவாஹிர் நாகூர் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் அறியும் சட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர்.
இந் நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் திருமதி.SJM.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.MMM.ஜரூப், கிராம உத்தியோகத்தர்கள்,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்விற்கு LIFT NGO (Project Coordinator) திரு. ரீ.சுதர்சன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மியன்மார் அரசாங்கத்தினால் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு வழங்கப்பட்ட அரிசி   கையளிக்கும் நிகழ்வு 18.04.2023  ஆந் திகதி செவ்வாய்க்கிழமை கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் சமூகப் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
 
இந் நிகழ்விற்கு சுற்றாடல் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் , முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளருமான  திரு.MM.நாஸர், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.MMM. ஜரூப், 167A  கிராம உத்தியோகத்தர் திருமதி.SNM.ஜரூப் ஆகியோர்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இவ் அரிசிப் பொதியானது மிகவும் பாதிப்பிற்குள்ளான 375 குடும்பங்களுக்கு 20Kg பொதி வழங்கி வைக்கப்படவுள்ளது.இதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 120 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயின் தீவிரத்தன்மை அதிகரித்துக் காணப்படுவதால் 2023.04.25 ஆந் திகதி தொடக்கம் டெங்கு கள விஜயம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் டெங்கு கள விஜய மீளாய்வு கூட்டமானது 2023.05.03 ஆந் திகதி புதன்கிழமை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் மனாறுல் ஹுதா பள்ளி வாயலிலும் நடைபெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திண்மக் கழிவகற்றல், தொழிற்சாலைகள் போன்ற பெரிய கட்டிடங்கள் காணப்படும் இடங்களில் பெரியளவில் நீர் தேங்கி காணப்படுவதால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் நகரசபையினால் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக் கூட்டத்திற்கு திரு.உ.உதயசிறிதர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் காத்தான்குடி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய "இலக்கிய சரம்" முதலாவது பல்சுவை நிகழ்வானது 2023.05.12 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அல்ஹாஜ் MHM.இஸ்மாயில் ஓய்வு பெற்ற (SLES)  அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மையும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் மாணவிகளின் குழுமம் பாடல்,நாடகம், வில்லுப்பாட்டு, மற்றும் பாவலர் சாந்தி முகைதீன் அவர்களது தலைமையில் கவியரங்கம்,செரண்டிப் முஸ்தபா குழுவினரின் நாடகமும் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு காத்தான்குடி பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர் திருமதி.SJM.ஜலால்தீன், கலாசார உத்தியோகத்தர் திரு.MIM.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா, மற்றும் பிரதேச கலைஞர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 2022.05.24 ஆந் திகதி முற்பகல்  9.30 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஒரு குடும்பத்திற்கு ரூபா 2500.00 பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சர்வோதய இணைப்பாளர் திரு.கரீம், மற்றும் டயலொக் மாவட்ட கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top