Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
பிரதேச செயலக மட்ட அனர்த்த திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு -2023
பிரதேச செயலக மட்ட அனர்த்த திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வானது (15) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , நூறானியா வித்தியாலயம், பதுறியா வித்தியாலயம், அன்வர் வித்தியாலயம், மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வின் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மற்றும் உத்தியோகத்தர்களினால் அனர்த்த முன்னாயத்த திட்டம் தயாரித்தல் தொடர்பான பல்வேறு விளக்கங்களும், கருத்துக்களும் வழங்கப்பட்டது.
மேலும் காத்தான்குடி பிரதேசம் நகர பிரதேசமாக இருப்பதால் விரைவாக ஏற்படக்கூடிய வெள்ளங்கள் பற்றிய விடயங்கள் கவனிக்கப்படுவதுடன், கான்கள் மற்றும் தோனாக்களில் விடப்படும் கழிவுகள் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்துடன் மழை காலங்களில் இந்த தோனாக்கள் மற்றும் கான்கள் நிரம்பி வழிகின்ற போது சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாகவும் இத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என்ற விடயமும் தெரிவிக்கப்பட்டது.



பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பாதணிகள் வழங்குதல்
சமுர்த்தி உதவி பெறும் வறுமையான குடும்பத்தில் உள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாகவும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடியைச் சேர்ந்த தனவந்தரிடமிருந்து 5 பாதணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன்
அதனை 166A, 167A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு 2023.08.14 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அன்சார் கலந்து கொண்டிருந்தார்.



சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கரப்பந்தாட்ட போட்டி -2023
சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி (12.08.2023) காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கும் ஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான கரப்பந்து போட்டித் தொடர் 2023.08.13 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் ஏறாவூர் நகர இளைஞர் கழக சம்மேளனத்தின் அல்-பாஸி இளைஞர் கழகம் முதலாம் இடத்தினையும், காத்தான்குடி சமூக மேம்பாட்டு இளைஞர் கழகம் (SSYC) இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.
இப் போட்டித் தொடரில் 1ம் இடத்தினைப் பெற்ற அணிக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் 2ம், 3ம், 4ம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டுப் பொருட்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் ஏறாவூர் நகர சபையின் தவிசாளரும் Voice of Eravur அமைப்பின் தலைவருமான MIM. தஸ்லீம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





சுகவனிதையர் கிளினிக்
காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் காத்தான்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் ஒழுங்கு படுத்தலில் காத்தான்குடி பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்களுக்கான சுகவனிதையர் கிளினிக்கானது 2023.08.10 ஆந் திகதி காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக் கிளினிக்கில் உயரம், நிறை, குருதி அமுக்கம், மார்பகப் பரிசோதனை, மற்றும் கர்ப்பப்பை கழுத்து பரிசோதனை ஆகியன தாதிய சகோதரிகளால் மேற்கொள்ளப்பட்டதுடன் உத்தியோகத்தர்கள் சிறந்த பயனைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
























