Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
குடியியல் உரிமைகள் கடமைகள் மற்றும் முழுமையான ஜனநாயகம் தொடர்பான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கு
காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஒழுங்கு படுத்தலிலும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ( CMEV ) ஏற்பாட்டில் குடியியல் உரிமைகள் கடமைகள் மற்றும் முழுமையான ஜனநாயகம் தொடர்பான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கானது 2023.09.12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டதுடன்
இக்கருத்தரங்கின் வளவாளர்களாக தேசிய இணைப்பாளர்
A.M.L.விக்டர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சியானி விஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டு ஜனநாயகத்திற்கு தேர்தல் அவசியம், தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல், ஜனநாயக உரிமைகள், பிரஜைகளின் பொறுப்புக்கள் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியம்சம் , மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினருக்கும் சமமான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கான தேர்தல் சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களுக்கான விளக்கங்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மகளிர் சங்க உறுப்பினர்கள், விசேட தேவையுடையோர் அமைப்பின் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மகா சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2023
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது (11) ஆந் திங்கட்கிழமை திகதி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்டோரில் வங்கிக் கணக்குகளை திறந்தவர்களின் எண்ணிக்கை, திறக்காதவர்களின் எண்ணிக்கை என்பவற்றை கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரீதியாக ஆராயப்பட்டு திறக்கப்படாமை க்கான காரணத்தை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்தாலோசித்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு உதவிப் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் சமூக நலன்புரி நன்மைகள் தொடர்பான மேன்முறையீடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.அதற்கான சரியான தகவல்களை உத்தியோகத்தர்கள் வழங்குமாறும் உதவிப் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
2023.09.12 ஆந் திகதி சமுர்த்தியினால் தெரிவு செய்யப்பட்ட 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் வாக்குரிமை, கடமைகள், தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வும் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து HRDA, Project manager, DMC, RDO, Forien Do, மற்றும் WDO,ECDO, Environment Do, CULTUREL DO, கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்,DO (மத்தியஸ்தம்) ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக உதவிப் பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.

வீட்டுத் தோட்ட அறுவடை விழா -2023
தேசிய உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சமுதாய அடிப்படை அமைப்புக்களினால் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கும் வழங்கப்பட்ட விதைகளை கொண்டு நடுகை செய்யப்பட்ட பூசணிக்காய் அறுவடை செய்யும் விழாவானது 2023.09.08 ஆந் திகதி 165B கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வறுவடை விழாவிற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், வலய முகாமையாளர் SHM.முஸம்மில், கருத்திட்ட முகாமையாளர் திருமதி S.கண்ணன், மற்றும் பிரிவு SDO திருமதி.FA.முனாப், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான MHM.அன்வர், MSM.நூர்தீன், ALHM.இப்றாஹிம், பிரிவிற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ABS.நுஸ்ரா , பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.