Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
காத்தான்குடி மத்தியஸ்த சபையின் புதிய அவை உறுப்பினர்களுக்கு நியமனங்கள் வழங்குதல்
காத்தான்குடியில் சமூக அடிப்படையிலான மாற்றுவழி பிணக்குத் தீர்வு பொறிமுறையின் கீழ் சமுதாய சனசமூக மத்தியஸ்த சபைகள் நிறுவுவதற்கான புதிய அவை உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 21.07.2023 வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் M.ஹிஸ்புள்ளாஹ் அவர்களின் ஒருங்கிணைப்பில்
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தி நடைபெற்றது பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மடக்களப்பு மாவட்ட நீதிபதி எச்.எம்.முஹம்மது பஸீல் அவர்கள் கலந்து கொண்டதுடன்
மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் MIM.ஆஸாத் அவர்களின் பங்களிப்புடன் கடிதங்களை வழங்கி வைத்தார்.
புதிய மத்தியஸ்த சபையில் 14 பெண்களும் 20 ஆண்களுமாக 34 உறுப்பினர்கள் நியமனம் பெற்றனர் இச்சபையின் தவிசாளராக MMM.மஃசூம்
அவர்களும், உப தவிசாளரக முபீதா றமீஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு நியமனம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, நகரசபை செயலாளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .









வீட்டுத் தோட்ட அறுவடை விழா -2023
தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி கிழக்கு 167B கிராம உத்தியோகத்தர் பிரிவு அன்பர் சமுதாய அடிப்படை அமைப்பின் நிதிப் பங்களிப்புடன் MMV 2ம் லேனில் அமைந்துள்ள ஏ.ஹிதாயத்தும்மா என்ற பயனாளியின் வீட்டில் செய்கை பண்ணப்பட்டிருந்த மரக்கறி வகைகள் அறுவடை செய்யும் விழாவானது 2023.07.18 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் அறுவடை செய்து வைக்கப்பட்டது.
இவ்வறுவடையில் வாழை, வெண்டி, கத்தரி,புடோல், பப்பாசி, கீரை போன்ற மரக்கறி வகைகள் அறுவடை செய்யப்பட்டது.
இவ்வறுவடை விழாவில் உதவிப் பிரதேச செயலாளர், கருத்திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர், மற்றும் பிரிவிற்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







தொழிற் சந்தை மற்றும் தொழிற்கல்வி க் கண்காட்சி -2023
மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்தும் தொழிற் சந்தை மற்றும் தொழிற்கல்வி கண்காட்சியானது இன்று (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களும், தனியார் தொழில் வழங்கும் நிறுவனங்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் கலந்து கொண்டு தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில்
வழிகாட்டல்களையும் , ஆலோசனைகளையும் வழங்கியிருந்ததுடன் நூற்றுக்கு மேற்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு பயனடைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, மாவட்ட இணைப்பாளர் ( மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம்) W.மைக்கல் கோலின், மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கருணாகரன், மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள வேலை வாய்ப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எஸ்.செல்வமலர், அஸ்மி தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் -2023
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் இவ்வாண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது 2023.07.11 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சரும், காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான Z.A.நஸீர் அகமட் (எந்திரி) பா.உ அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் கடந்த ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்களின் மீளாய்வும், இவ்வாண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட/ நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்களின் மீளாய்வு மற்றும் திணைக்கள ரீதியான பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ் பிரதேச செயலகப் பிரிவின் திணைக்கள தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






























