Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப் பட்டறை -2023
காத்தான்குடி கலாசார பிரிவு நடாத்தும் மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப் பட்டறையானது இன்று (20) செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சிப்பட்டறையானது மாணவர்களின் கலை ஆர்வத்தினை மேம்படுத்தவும் , பாடசாலை மட்ட சஞ்சிகை போட்டிக்கான தரமான ஆக்கங்களை மாணவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும், மாணவர்களுக்கு சிறுகதை எழுதுவது தொடர்பான பயிற்சிகளை வளவாளராக கலந்து கொண்ட ஓட்டமாவடி அறபாத்,கலாபூஷணம் பாத்திமா முஹம்மட் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.



இப்பயிற்சியில் தரம் 1-13 வரை கல்வி கற்கும் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் எம்ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.



கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2023
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது இன்று (19) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றுள்ளதாகவும் இப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பிரதேச செயலாளரால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உணவுப் பாதுகாப்பு வேலைத் திட்டத்தினை மிக விரைவாக அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிறைவு செய்யுமாறு உதவிப் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அத்துடன் பிரதேச செயலகத்தினால் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் போது அதனோடு தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும், கள உத்தியோகத்தர்கள் களவிஜயத்தினை மேற்கொள்ளும் போது வழங்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்து பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிக்கள உத்தியோகத்தர்கள் கள விஜயத்தின்போது டெங்கு மற்றும் தொற்றா நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கும் , பொது மக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் தொழில் புரியும் மற்றும் தொழில் புரிந்து 2 வருடங்களில் நாடு திரும்யுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ரூபா 8000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காணி, முதியோர் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், WDO, PDO, ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலைகள் தொடர்பான முன்னேற்றங்களை பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



காத்தான்குடியில் தொடரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது பிரதேச செயலாளர் உ.உதயசறிதர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொடர்ந்து வீடு வீடான டெங்கு களவிஜயம் உத்தியோகத்தர்களால் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்று (15) ஆந் திகதி 167,167E ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 225 வீடுகளுக்கு களவிஜயம் மேற்கொண்ட போது 06 வீடுகள் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 11 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு களவிஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சமுதாய அடிப்படை அமைப்புக்கள், களப்பணியில் ஈடுபட்டனர்.
வீடு வீடான டெங்கு களவிஜயத்தினை தொடர்ந்து மீளாய்வு கூட்டமானது காத்தான்குடி- 01, மீராஜும்ஆ பள்ளிவாயலில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் கடந்த 07 நாட்களிலும் நகரசபையினால் எதுவிதமான ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர் உ.
உதயசிறிதரின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இணைந்து டெங்கு ஒழிப்பு கள விஜயம் கடந்த 07 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
13 மற்றும் 14 ஆந் திகதிகளில் 165ஏ,166 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் டெங்கு கள விஜயம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் டெங்கு பரவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட 03 வீட்டு உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 30 வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு கள விஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள், ஆகியோர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
வீடுகளுக்கான கள விஜயத்தினை தொடர்ந்து டெங்கு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


























