காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் இவ்வாண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது 2023.07.11 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சரும், காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான Z.A.நஸீர் அகமட் (எந்திரி) பா.உ அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
இக் கூட்டத்தில் கடந்த ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்களின் மீளாய்வும், இவ்வாண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட/ நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்களின் மீளாய்வு மற்றும் திணைக்கள ரீதியான பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
 
காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ் பிரதேச செயலகப் பிரிவின் திணைக்கள தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது இன்று (17) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக்கூட்டத்தில் Syscgaa ஊடாக Advance programme மற்றும் Diary சமர்ப்பிக்கும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அதனை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் அதனை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
மேலும் தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கமைவாக தெரிவு செய்யப்பட்ட 3354 பயனாளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் வங்கிகளினூடாக கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
 
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 5116 மேன்முறையீடு கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக நலன்புரி உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து ECDO,LAND,DMC, HRDA,,WDO,DO(மத்தியஸ்த சபை) , மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர், புள்ளி விபரத்திணைக்கள உத்தியோகத்தர், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் நலன்புரி நன்மைகள் சபையின் மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை தொடர்பான கடமைகள் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாக நடைபெற்றுக்  கொண்டு வருகின்றது.
 
அந்தவகையில் 2023.06.20 ஆந் திகதி வெளியிடப்பட்ட நலன்புரி நன்மைகள் பயனாளிகளின் பெயர்ப் பட்டியலுக்கமைவாக பொது மக்களிடமிருந்து மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை கள் கோரப்பட்டதற்கமைவாக இணையவழி ஊடாக 2023.07.05 ஆந் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் 3813 மேன்முறையீடுகளும், 111 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
 
மேலும் இதுவரை மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை களை மேற்கொள்ளாத வர்கள் 2023.07.10 ஆந் திகதிக்கு முன்னர் www.iwms.wbb.gov.lk,
https:/ iwms.wbb.gov.lk/ complaint எனும் இணையத்தள முகவரியினூடாக பதிவிட முடியும்.
 
இந் நடவடிக்கையினை இலகுபடுத்தும் பொருட்டு கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நலன்புரி நன்மைகள் கடமையினை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
 
 
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது இன்று (10) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு ஏற்பாடுகள் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக்கூட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையினால் மேற்கொள்ளப்படும் மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பாக இதுவரை 4812 மேன்முறையீடுகளும் 115 ஆட்சேபனைகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பிரதேச செயலாளரால் வினவப்பட்டதுடன் தங்களிடம் கிடைக்கப் பெற்ற விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும் இன்றுடன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து நிறைவு செய்யுமாறும்     பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
உணவுப் பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தில் 13575 வீடுகளில் ஆய்வுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் 2401 வீடுகள் நிறைவடையவில்லை  எனவும் அதனை  விரைவாக நிறைவு  செய்யுமாறு Gso, Edo, Sdo, Do ஆகியோரிடம் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து ECDO,LAND, HRDA,SHQ,WDO,DO(மத்தியஸ்த சபை) , மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
"இளவயதினருக்கான ஒரு செய்தி" எனும் சமுதாய அடிப்படை வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடி வேலைத்திட்டத்தின் கீழ் " புகைத்தலிருந்து மீண்டதோர் தேசம் மகிழ்ச்சி நிறைந்த தோர் கிராமம்" என்ற தலைப்பிற்கு அமைய பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டல்களுக்கும்அமைய சமுதாய அடிப்படை  அமைப்பின் இளைஞர்களுக்கான மென் பந்து கிரிக்கட் போட்டியானது 2023.06.22 ஆந் திகதி  காத்தான்குடி ஹிஸ்புல்லா பொது மைதானத்தில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்விற்கு பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கி வலய உதவியாளர்கள், சமுதாய அமைப்பின் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 
இப்போட்டியில் இரண்டு அணிகள் பங்குபற்றியதுடன் காத்தான்குடி வலயம் சார்பாக ஒரு அணியும் புதிய காத்தான்குடி வங்கி வலயம் சார்பாக அல்-மதினாஸ் அணியும் போட்டியில் கலந்து கொண்டது.
 
இப்போட்டிக்கு  எச்.எம்.ரமீஸ் மற்றும் ஏ.ஏ.றிஸ்வி நடுவர்களாக கடமையாற்றி இருந்ததோடு 
இறுதிச் சுற்றான மாவட்ட மட்ட போட்டிக்கு புதிய காத்தான்குடி வங்கி வலயம் சார்பாக விளையாடிய 167B பிரிவு அல்-மதினாஸ் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
Aug2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
Jul2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top