ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
காத்தான்குடியில் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல்
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல் கூட்டமானது 2023.10.10 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு தடையாக இருக்கும் மற்றும் அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களை இனங்கண்டு அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளினை துரிதப்படுத்த களவிஜயம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன், அனர்த்த நிலைமைகளின் போது நிவாரண சேவையினை துரிதப்படுத்தல், அனர்த்த முன்னாயத்த திட்டம் தயாரித்தல் மற்றும் பிரதேச இளைஞர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சியளித்தல் , அனர்த்த நிலைமைகளின் போது
ஏற்படுகின்ற வதந்திகள் பற்றிய விழிப்புணர்வு அத்துடன் சுனாமி, நிலநடுக்கம் தொடர்பாக மக்களை விழிப்பூட்டல் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மழை காலங்களில் வெள்ளபெருக்கு ஏற்படும் போது உடையக்கூடிய கழிவு நீர் தொட்டிகளை திருத்தம் செய்வதற்காக மக்களுக்கான தெளிவுபடுத்தல்களை வழங்குமாறு நகரசபைக்கும் தெரிவிக்குமாறு SPHI இடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் வீடுகளில் தங்கி வாழும் மக்களுடைய எண்ணிக்கை ஆகியவற்றை துல்லியமாக ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் பிரதேச செயலகத்திற்கு அறிக்கையிடுமாறு கிராம உத்தியோகத்தர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஒக்ரோபர் மாதம் முழுவதும் வெள்ள அனர்த்த மாதமாக கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாஸ், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், மற்றும் ஆதார வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொலிஸ், கடற்படை, CTB,CEB, மிருக வைத்திய அதிகாரி,ஜாமியத்துல்உலமா , அனைத்து பள்ளிவாயல் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கிராம உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி -2023
காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சியானது 2023.10.09 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
இவ் விற்பனை கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாதணிகள், இனிப்பு பண்டங்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள், மற்றும்
ஆடைகள் , விதைக் கன்றுகள் போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பெருமளவில் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட செயலகம், மட்டக்களப்பு எஸ்.ஆர் .றோய்ஸ்டன், கிராம உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





2014/2015 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை செயல்படுத்தலின் கீழ் வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ், உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் 5 ஆண்டுகளில் பின்னர் உரிமை மாற்றம் செய்தல் தொடர்பாக.
மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் 5 ஆண்டுகளில் பின்னர் உரிமை மாற்றம் செய்தல் தொடர்பான நடமாடும் சேவை ஒன்று 2023.10.21ம் திகதியன்று மட்டக்களப்பு இந்து கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ் நடமாடும் சேவையில் வழங்கப்பட உள்ள சேவைகள்.
01. 2015 /2014 அரச சேவையாளர்களின் மோட்டார் சைக்கிள்களது நிபந்தனைகளை நீக்கி உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல்.
02. பொதுமக்களின் முன்னைய வருடங்களில் விண்ணப்பித்து இதுவரை தீர்க்கப்படாது உள்ள விண்ணப்பங்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு.
03. பதிவுச் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளல்.
04. வாகனங்களை பரிசீலித்து நிறைச்சான்றிதழ் (Wight certification) மற்றும் அடையாளச் சான்றிதழ் வழங்குதல்.
05. சகல வாகனங்களுக்கான உடமை மாற்றல் விண்ணப்பங்களை பொறுப்பேற்றல்.
06. எழுத வாசிக்க தெரியாத தேர்ச்சி குறைந்த நபர்களுக்கான வாகன அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு விசேட பரீட்சை ஒன்றை நடாத்துதல்.
07. வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலை திட்டங்கள்.
08. நீண்ட காலமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாத ஆவணங்களில் குறைபாடுகளுடன் கூடிய வாகனங்களுக்காக மீண்டும் வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு சிபாரிசு கடிதங்களை வழங்குதல்.
09. சிலிண்டர் கொள்ளளவு 50cc குறைந்த மோட்டார் சைக்கிள்களை (மோபேட்) பதிவு செய்தல்.
10. சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளல்.
11. விஷேட இயலுமைகளுடன் கூடிய நபர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தேவையான வைத்திய தொழில்நுட்ப குழுவின் சிபாரிசுகளை வழங்குதல்.
12. வாகனங்களின் எக்ஸ்ட்ராக்ட் (extract) வழங்குதல்.
13. தெளிவற்ற செசி மற்றும் எஞ்சின் இலக்கங்களை தேசிய ரீதியாக அச்சிடல். ( மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும்).























