ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
காத்தான்குடியில் சுற்றுலா துறை தொடர்பாக போக்குவரத்து வசதிகள் வழங்குவோருடனான கூட்டம்
காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்திக் கட்டமைத்தல் தொடர்பாக போக்குவரத்து வசதிகள் வழங்குவோருடனான கூட்டம் 2023.09.18 ஆந் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலாளர் அறையில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தின் போது சுற்றுலாத் துறையில் வாகன சாரதிகளின் பங்களிப்பு, போக்குவரத்தின் போது சாரதிகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் போக்குவரத்துக்கு தடையாக காணப்படும் விடயங்களை சீர்படுத்துவதற்காக Deputy Inspector General of Police, மற்றும் Road Development Department என்பவற்றிற்கு அறிவிப்புக்களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் , வேன் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் , பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





குறைந்த வருமானம் பெறும் மற்றும் தற்காலிக நெருக்கடிக்குள்ளான குடும்பங்கள் தொடர்பான பகுப்பாய்வு செயலமர்வு
குறைந்த வருமானம் பெறும் மற்றும் தற்காலிக நெருக்கடிக்குள்ளான குடும்பங்கள் தொடர்பான பகுப்பாய்வு செயலமர்வு 2023.09.15 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வின் வளவாளராக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர் அவர்களால் விரிவுரைகள் இடம்பெற்றது.
மேலும் ஆசிய வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வாழ்வாதார கருத்திட்டங்களின் சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாகவும், பிரதேச மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை காண்பதற்குரிய அதிகமான செயற்திட்டங்களை உத்தியோகத்தர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.அந்தவகை யில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து இச் செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இச்செயலமர்வில் பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பல்வேறு திணைக்கள தலைவர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு
பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால்
"சிசுபல" வேலைத் திட்டத்தின் கீழ் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு 2023.09.12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வானது காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர்களின் சிறார்களுக்கு ஒருவருக்கு ரூபா 1776 /= பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்
பிரதேச செயலாளரால் மிகவும் சுவாரசியமானதும் அறிவுபூர்வமானதுமான சொற்பொழிவுகளை சிறார்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 165-6, 164C -2, 165A-3, 166-12, 167E-9,167B-24, 167D-17, 162A-36, 167C -38, 162-10, 167A-42, 167-15, 166A-15, 164A-10, 165B-2, 164B-6, 162B-12, 164-7 மொத்தமாக 266 சிறார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், அதிபர்கள், சமுதாய அடிப்படை அமைப்பிற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் வலய உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





சுற்றுலா துறை தொடர்பாக வர்த்தக சமூகத்துடனான கலந்துரையாடல்
சுற்றுலா அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் சுற்றுலா துறையை மேம்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்தவகையில்
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுற்றுலா துறை தொடர்பாக வர்த்தக சமூகத்துடனான கலந்துரையாடல் 2023.09.12 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , மற்றும் காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தக முன்னோடிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
சுற்றுலா அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் சுற்றுலா துறையை மேம்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்தவகையில்
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுற்றுலா துறை தொடர்பாக வர்த்தக சமூகத்துடனான கலந்துரையாடல் 2023.09.12 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , மற்றும் காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தக முன்னோடிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்பில் காத்தான்குடியில் சுற்றுலா துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகளால் சுற்றுலா துறை தொடர்பான திட்ட முன்மொழிவு ஒன்றும் பிரபல வர்த்தகரான எஸ்.எல்.எம்.ஆரிப் அவர்களினால் திட்ட முன்மொழிவு ஒன்றும், பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.




























