ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்தி கட்டமைத்தல் தொடர்பாக தங்குமிட வசதி வழங்குனர்களுடனான கூட்டம் -2023
காத்தான்குடியில் காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்தி கட்டமைத்தல் தொடர்பாக தங்குமிட வசதி வழங்குனர்களுடனான கூட்டமானது 2023.09.26ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா துறையில் தங்குமிட வசதி வழங்குனர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும், சுற்றுலா துறைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்துதல், அதனை எவ்வாறு ஒழுங்கு படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், காத்தான்குடி நகரசபை செயலாளர், மற்றும் தங்குமிட வசதி வழங்குனர் சங்க உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





காத்தான்குடியில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக காத்தான்குடியில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையானது சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலிலும் 26,27,30, ஆகிய திகதிகளில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
அந்தவகையில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகக்கூடிய ஆபத்தான இடங்களை பார்வையிட்டு அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2023
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது (25) ஆந் திங்கட்கிழமை திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் போது அனைத்து உத்தியோகத்தர்களும் KPI யில் குறிப்பிட்டவாறு மூன்றாம் காலாண்டிற்கான செயற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறு பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அடுத்து சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்காதவர்கள் மேன்முறையீடு செய்ய முடியாது எனவும் சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்ட 3354 பயனாளிகளில் 3058 பேருக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் 2153 பயனாளிகளுக்கு பணம் வைப்பிலிடப் பட்டுள்ளது.905 பேருக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சரிபார்க்கப்பட்டதன் பின் அவர்களுக்கான பணம் வைப்பிலிடப்படுமென சமூக நலன்புரி அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சமூக நலன்புரி நன்மைகள் சபையினால் நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டுக் குழுவினால் மேன்முறையீடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து கருத்திட்ட முகாமையாளர், DCO, கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




























