காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்திக் கட்டமைத்தல் தொடர்பான கூட்டமானது (12) ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.
எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமூகத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், NGO's, INGO's உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இக் கூட்டத்தின் போது வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை எவ்வாறு ஒழுங்கமைத்தல், சுற்றுலா துறைக்கான வளங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கையாளுதல் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா தொடர்பான Calender தயாரித்தல், சுற்றுச்சூழல், கலாசார ரீதியான பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
0.10.2023 ஆந் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தல் செயற்பாட்டிற்கான களவிஜயம் ஒன்று ( 12) ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில்  நடைபெற்றது.
 
இக் களவிஜயத்தின் போது ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மரம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு அதன் கிளைகளை அகற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.அத்துடன் நீர் வழிந்தோடக் கூடிய தோணாக்களை பார்வையிட்டதுடன் நீர் செல்லத் தடையாக இருக்கின்ற தோணாக்களை நகரசபைக்கு துப்பரவு செய்யுமாறு பணிக்கப்பட்டது.
 
மேலும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தோணாக்களில் விடப்படுவது அவதானிக்கப்பட்டு குறித்த கடை உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் பொலிஸ் மற்றும் சுகாதார பிரிவினருக்கு உரிய சட்ட நடவடிக்கை பணிமேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த பிரதிப் பணிப்பாளர் ஆகியோரால் பணிப்புரை  விடுக்கப்பட்டுள்ளது.
 
அதனைத் தொடர்ந்து தோணாக்களில் அதிகளவான குப்பைகள் கொட்டப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசிக்கப்பட்டது.
 
இக்களவிஜயத்தில் திருமதி.ஆர்.எவ்.அமீன் (LO), திருமதி.எம்.பாஸ்கரன் (DO, Coast Conservation Dept),  திருமதி.ஆர்.பாஸ்கரன் (DEO, CEA, District office), KDW.அனுரா(SI, police station,kky) மற்றும் AMM.பஸீர்(SPHI,MOH, kky), MIM.நியாஸ் (AO,UC, kky), MSM.சிம்றி  (DMA,DMC,kachcheri), MN.நஜ்மி(DO,NDRSC,Dsoffice,kky) ஆகியோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல் கூட்டமானது 2023.10.10 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
இக் கூட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு தடையாக இருக்கும் மற்றும் அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களை இனங்கண்டு அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளினை துரிதப்படுத்த களவிஜயம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன், அனர்த்த நிலைமைகளின் போது நிவாரண சேவையினை துரிதப்படுத்தல், அனர்த்த முன்னாயத்த திட்டம் தயாரித்தல் மற்றும் பிரதேச இளைஞர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சியளித்தல் , அனர்த்த நிலைமைகளின் போது 
ஏற்படுகின்ற வதந்திகள் பற்றிய விழிப்புணர்வு அத்துடன் சுனாமி, நிலநடுக்கம் தொடர்பாக மக்களை விழிப்பூட்டல் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
 
 அத்துடன் மழை காலங்களில் வெள்ளபெருக்கு ஏற்படும் போது உடையக்கூடிய கழிவு நீர் தொட்டிகளை திருத்தம் செய்வதற்காக மக்களுக்கான தெளிவுபடுத்தல்களை வழங்குமாறு  நகரசபைக்கும் தெரிவிக்குமாறு SPHI இடம் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் வீடுகளில் தங்கி வாழும் மக்களுடைய எண்ணிக்கை  ஆகியவற்றை துல்லியமாக ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் பிரதேச செயலகத்திற்கு அறிக்கையிடுமாறு கிராம உத்தியோகத்தர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
ஒக்ரோபர் மாதம் முழுவதும் வெள்ள அனர்த்த மாதமாக கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
இக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாஸ், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரண  உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், மற்றும் ஆதார வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொலிஸ், கடற்படை, CTB,CEB,  மிருக வைத்திய அதிகாரி,ஜாமியத்துல்உலமா , அனைத்து பள்ளிவாயல் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கிராம உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் சுவட்டு மைதான நிகழ்வுகளும், சான்றிதழ் வழங்கும் விழாவும் 07/10/2023 ஆந் திகதி சனிக்கிழமை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்ஷாத் அலி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ILM .சாபிர் அவர்களின் தலைமையில் காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) விளையாட்டு மைதானத்தில்  இடம் பெற்றது.
 
 இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.ஜேசுதாசன் கலாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மேலும், அதிதிகளாக சமூக மேம்பாட்டுக்கான மக்கள் நிறுவன பணிப்பாளர் MIM. ஹாரிஸ் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமா MSM.நூர்தீன் அவர்களும், விளையாட்டு உத்தியோகத்தர் இன்சாத் மொகமட் அலி அவர்களும் மற்றும் முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் NMM.பாயிஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வில் 34 ஆவது இளைஞர் விளையாட்டுப் போட்டியின் குழு மற்றும் தனி விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகளுக்கான  சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சியானது  2023.10.09 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
 
இவ் விற்பனை கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாதணிகள், இனிப்பு பண்டங்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள், மற்றும் 
ஆடைகள் , விதைக் கன்றுகள் போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பெருமளவில் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட செயலகம், மட்டக்களப்பு எஸ்.ஆர் .றோய்ஸ்டன்,  கிராம உத்தியோகத்தர்கள்,  சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top