மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் 5 ஆண்டுகளில் பின்னர் உரிமை மாற்றம் செய்தல் தொடர்பான நடமாடும் சேவை ஒன்று 2023.10.21ம் திகதியன்று மட்டக்களப்பு இந்து கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ் நடமாடும் சேவையில் வழங்கப்பட உள்ள சேவைகள்.
01. 2015 /2014 அரச சேவையாளர்களின் மோட்டார் சைக்கிள்களது நிபந்தனைகளை நீக்கி உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல்.
02. பொதுமக்களின் முன்னைய வருடங்களில் விண்ணப்பித்து இதுவரை தீர்க்கப்படாது உள்ள விண்ணப்பங்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு.
03. பதிவுச் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளல்.
04. வாகனங்களை பரிசீலித்து நிறைச்சான்றிதழ் (Wight certification) மற்றும் அடையாளச் சான்றிதழ் வழங்குதல்.
05. சகல வாகனங்களுக்கான உடமை மாற்றல் விண்ணப்பங்களை பொறுப்பேற்றல்.
06. எழுத வாசிக்க தெரியாத தேர்ச்சி குறைந்த நபர்களுக்கான வாகன அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு விசேட பரீட்சை ஒன்றை நடாத்துதல்.
07. வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலை திட்டங்கள்.
08. நீண்ட காலமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாத ஆவணங்களில் குறைபாடுகளுடன் கூடிய வாகனங்களுக்காக மீண்டும் வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு சிபாரிசு கடிதங்களை வழங்குதல்.
09. சிலிண்டர் கொள்ளளவு 50cc குறைந்த மோட்டார் சைக்கிள்களை (மோபேட்) பதிவு செய்தல்.
10. சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளல்.
11. விஷேட இயலுமைகளுடன் கூடிய நபர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தேவையான வைத்திய தொழில்நுட்ப குழுவின் சிபாரிசுகளை வழங்குதல்.
12. வாகனங்களின் எக்ஸ்ட்ராக்ட் (extract) வழங்குதல்.
13. தெளிவற்ற செசி மற்றும் எஞ்சின் இலக்கங்களை தேசிய ரீதியாக அச்சிடல். ( மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும்).
காத்தான்குடி பிரதேச செயலக 2023 ஆம் ஆண்டிற்கான 6வது பிரதேச தினக் கூட்டமானது 2023.10.02 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் போது சென்ற பிரதேச தினக் கூட்டத்தில் Beach Road இல் வீதியில் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாவும் ஏற்கனவே அவ் வீதியில் வாகனத்தடைகள் போடப்பட்டிருந்தும் தற்போது இல்லை எனவும் இதனால் போக்குவரத்திற்கு தடையும், தாமதமும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க தற்போது போக்குவரத்து தடைகள் குறைந்துள்ள போதிலும் வாகன நெரிசல் குறையவில்லை எனவும் மாற்று ஒழுங்கிற்காக பொலிசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் டெங்கு பிரச்சினை சம்பந்தமாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கையில் டெங்கு களப்பணியானது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தற்போது மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதன் காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்ற வாரம் 26-30 ஆந் திகதி வரை டெங்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தார். பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் களவிஜயத்தினை மேற்கொள்ளும் போது டெங்கு சோதனைகளை மேற்கொள்வதாக பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காத்தான்குடி 6ஆம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்ன லெப்பை மாவத்தையிலுள்ள நகை உருக்கும் பட்டறையினால் நைற்றஜன் அமிலம் வெளியிடப்படுவதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென பிரதேச செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவிக்கப்பட்டது.
அன்வர் பாடசாலை உளநலப்பிரிவு கட்டிட நிலம் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரால் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதிநிதிகளிடம் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர், செயலாளர் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் அவற்றின் பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.


























