பிரதேச  செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் வழிகாட்டலிலும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி .எம்.எஸ்.சில்மியா 
அவர்களின் மேற்பார்வையில் டெங்கு சிரமதானம் இன்று (03) வெள்ளிக்கிழமை அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
 
 
இத்திரைப்பட விழாவானது "கிழக்கு பிராந்தியத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல்" எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கையில் சமூக ஒத்திசைவு மற்றும் சமாதானத்தை வலுப்படுத்துதல் (SCOPE) எனும் திட்டத்தால் முன்னெடுக்கப்பட்டது.  SCOPE திட்டமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் ஃபெடரல் வெளியுறவு அலுவலகம் இணைந்து நிதி உதவி செய்யும் கூட்டு முயற்சியாகும். நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்
அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுடன் இணைந்து The Deutsche Gesellschaft für
Internationale Zusammenarbeit (GIZ) GmbH ஆல் அமுல்படுத்தப்படுகிறது.
 
இத்திட்டமானது இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான மற்றும் வளமான சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்கோடு நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
 
இந்நோக்கத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாணத்தில்  செப்டம்பர் 11 முதல் 21 வரை ஒரு சர்வதேச திரைப்பட விழா வை அம்பாறை (13,14 தெ.கி.ப), மட்டக்களப்பு (18,19), திருகோணமலை (20,21) ஆகிய மாவட்டங்களில் நடத்தியிருந்தது.
 
மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழா 2023 ன் முன் திரைப்பட விழா (Pre-Festival) செப்டம்பர் 18 இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூக நல்லிணக்க மையத்துடன் (SRC) இணைந்து நடத்தப்பட்டது. இவ்விழாவில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பிரதேச சகவாழ்வு சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் உட்பட 80 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
                                                        குறித்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேசம் சார்பாக கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி கூறும் முகமாக புதன்கிழமை நவம்பர்.01.2023ம் திகதி SCOPE திட்டத்தின் கலை மற்றும் தொடர்பாடல் பங்காண்மைக்கான ஆலோசகர் ஏ.சி. முஹம்மட் மாஹிர் மற்றும் மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஐ. ஜாபிர் ஆகியோர் பிரதேச செயலகத்திற்கு நேரடியாக வருகை தந்து பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களிடம் நினைவுச்சின்னம்  ஒன்றினை கையளித்தார். 
 
இந்நிகழ்வில் பிரதேச செயலக நல்லிணக்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.சபீர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.சிந்துஉஷா ஆகியோர்  கலந்து கொண்டனர்..
சமுர்த்தி தேசிய சம்மேளனம் " பிரஜா ஹரசர" விருது வழங்கும் விழாவானது 2023.10.30 ஆந் திகதி புதன்கிழமை மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம் பெற்றது.
 
இவ் விழாவில் சமுர்த்தி உத்தம பூஜா சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் பிரதேச அமைப்புக்கான பாராட்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 167C கிராம உத்தியோகத்தர் பிரிவு தலிபான் சமுதாய அடிப்படை அமைப்பு முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
 
இவ் விருதினைப் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர்களை    பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (30) பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
இவ்விருதினை  பெற்றுக் கொள்வதற்கு வழிப்படுத்திய பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர், மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், தலிபான் சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
 
பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் இவ் விருதினைப் பெறுவதற்கான முக்கிய காரணம் அவர்கள் நிறுவன ரீதியான செயற்பாடுகள் மட்டுமன்றி சமூகம் மற்றும் சூழல் சார்ந்த செயற்பாடுகளை செய்ததுடன் அது தொடர்பான ஆவணங்களையும் சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டமையுமேயாகும். எனவே எந்த செயற்பாட்டையும் செய்யும் போது ஆவணங்களை சரியான முறையில் பேணப்படுதல் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
கலைஞர் சுவதம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும் அறிவுறுத்தல்களுக்கமைவாகவும்  காத்தான்குடி கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின்  ஏற்பாட்டில்  கலைஞர்களுக்கு உலருணவுப் பொதி வழங்கும் நிகழ்வு ( 30) திங்கட்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
 
அந்தவகையில் உதுமா லெப்பை முஹமட் ஹனீபா (பாவா வயது 70), அகமது லெப்பை அப்துல் காதர் (வயது 85) ஆகிய இரு கலைஞர்களுக்கு 2500/=  பெறுமதியான ( சிவப்பு சோற்றரிசி, அரிசி மாவு, சமபோஷ, கடலை, கௌப்பி, நெத்தலி) 
உலருணவுப் பொதி உதவிப் பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் நளீம், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.10.30 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
இக்கூட்டத்தில் Child unit officer's, Land branch officer's, DO(NADA), கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் DO (Agriculture), HRDA, DO(Skill ), RDO, Science &Teachnology Officer, ஆகியோரிடம் தங்களது வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top