Legal Aid Commission சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட  நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக சிறுவர் பெண்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகம் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கான நிவாரணங்கள் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2023.12.14  ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் சிறுவர் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.ஆர்.வீ.றஸ்மீன் அவர்களது ஒருங்கிணைப்பில் IWARE அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
 
இச்செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, மற்றும் நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப் , நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் , 
 சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 
ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
வளவாளர்களாக சட்டத்தரணி FX.விஜயகுமார், LLB,MPhil கே.கிறிஸ்ணகுமார், நுகர்வோர் அதிகாரசபையின் Investigation Officer அகமட் நபார், மற்றும் ரீ.சுதர்சன், சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளான திருமதி.மிருதினி சுரேஸ்குமார், திருமதி.கஜாலினி ஹரிபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள பாடநெறியின் 2ம் கட்ட     ஆரம்ப நிகழ்வு 2023.12.14 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இப்பாடநெறியில் 71 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளராக என்.துஜோகாந் அவர்கள்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இவ் ஆரம்ப நிகழ்வில்  உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான எட்டாவது பிரதேச தினக் கூட்டமானது 2023.12.12ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
சென்ற கூட்டத்தின் போது  காத்தான்குடியில் காணப்படும் இரண்டு தோணாக்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் மழைநீர் வழிந்தோடுவதற்கு தடையாக உள்ளதாகவும் , தெரிவிக்கப்பட்டதற்கமைவாக  தோணாக்கள்  சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நகரசபையினால் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் சிறுவர் பராமரிப்பு இல்லத்திலுள்ள சிறுவர்களை பாடசாலையில் கல்வி கற்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும். சிறுவர் இல்ல சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக  பொலிசிற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு பிரதேச செயலாளரால்  தெரிவிக்கப்பட்டது.
 
காத்தான்குடியில் குட்வின் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள வீதியோரக் கடைகளை அகற்றவும்,  container கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் திறந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலாளரிடம்காத்தான்குடி பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டது.
 
அத்துடன்
 பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் போது மாணவிகளை இளைஞர்கள் கிண்டல் செய்வதாகவும் அவர்களை பொலிஸ் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாரிடம் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் UC Road, மற்றும் RDD Road ஆகிய வீதிகளில் நடைபாதைகளில்  வியாபாரிகள் வியாபாரம் மேற்கொள்வதால் பாதசாரிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
 
தற்போது மழை காலங்கள் என்பதனால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதால் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் டெங்கு பரவும் இடங்களை சுத்தம் செய்யுமாறும் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
மேலும் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச செயலாளரால் கலந்துரையாடப்பட்டது.
 
இக்கூட்டத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா  நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் மற்றும்  கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர் செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
https://www.gstatic.com/companion/icon_assets/calendar_2020q4_2x.png"); user-select: none;">
 
https://www.gstatic.com/companion/icon_assets/keep_2020q4v3_2x.png"); user-select: none;">
 
https://www.gstatic.com/companion/icon_assets/tasks_2021_2x.png"); user-select: none;">
 
https://www.gstatic.com/companion/icon_assets/contacts_2022_2x.png"); user-select: none;">
 
https://fonts.gstatic.com/s/i/googlematerialicons/add/v21/black-24dp/1x/gm_add_black_24dp.png");">
 
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான 16 நாள் செயல்வாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகமும் IWARE மகளிர் அமைப்பும் இணைந்து சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்புடன் 2023.12.12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பாடசாலை மாணவிகள் மற்றும் GBV Forum பங்குதாரர்களுக்கும் இரண்டு கட்டங்களாக செயலமர்வு காத்தான்குடி Beach Way Hotel இல் இடம்பெற்றது.
 
முதல் கட்டமாக மட்/ அல் அமீன் வித்தியாலயம் மற்றும் மட்/பதுரியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 10,11 ல் கல்வி கற்கும் 350 மாணவிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
வளவாளராக பெண் நோயியல் வைத்திய நிபுணர் Dr.சிராஜ் அவர்கள் கலந்து கொண்டு விழிப்பூட்டல்களை வழங்கியிருந்தனர்.
 
அடுத்து இரண்டாம் கட்ட அமர்வானது GBV Forum பங்குதாரர்களுக்கு நடைபெற்றது.
 
இச் செயலமர்வின் வளவாளராக பெண் நோயியல் வைத்திய நிபுணர் Dr.சிராஜ் மற்றும் உளநல வைத்திய அதிகாரி Dr.Daan ஆகியோர் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
 
இந் நிகழ்வில் உதவிப்   பிரதேச செயலாளர் MS.சில்மியா,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர், MOH, பொலிஸ் சிறுவர் பெண்கள் பிரிவு  பொறுப்பதிகாரி, சிறுவர் நன்நடத்தை திணைக்கள பொறுப்பதிகாரி, மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், PHM, SPHM, PHI , SPHI  ஆகியோர் கலந்து கொண்டனர்..
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான எட்டாவது பிரதேச தினக் கூட்டமானது 2023.12.12ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
சென்ற கூட்டத்தின் போது  காத்தான்குடியில் காணப்படும் இரண்டு தோணாக்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் மழைநீர் வழிந்தோடுவதற்கு தடையாக உள்ளதாகவும் , தெரிவிக்கப்பட்டதற்கமைவாக  தோணாக்கள்  சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நகரசபையினால் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் சிறுவர் பராமரிப்பு இல்லத்திலுள்ள சிறுவர்களை பாடசாலையில் கல்வி கற்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும். சிறுவர் இல்ல சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக  பொலிசிற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு பிரதேச செயலாளரால்  தெரிவிக்கப்பட்டது.
 
காத்தான்குடியில் குட்வின் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள வீதியோரக் கடைகளை அகற்றவும்,  container கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் திறந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலாளரிடம்காத்தான்குடி பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டது.
 
அத்துடன்
 பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் போது மாணவிகளை இளைஞர்கள் கிண்டல் செய்வதாகவும் அவர்களை பொலிஸ் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாரிடம் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் UC Road, மற்றும் RDD Road ஆகிய வீதிகளில் நடைபாதைகளில்  வியாபாரிகள் வியாபாரம் மேற்கொள்வதால் பாதசாரிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
 
தற்போது மழை காலங்கள் என்பதனால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதால் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் டெங்கு பரவும் இடங்களை சுத்தம் செய்யுமாறும் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
மேலும் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச செயலாளரால் கலந்துரையாடப்பட்டது.
 
இக்கூட்டத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா  நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் மற்றும்  கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர் செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
https://www.gstatic.com/companion/icon_assets/calendar_2020q4_2x.png"); user-select: none;">
 
https://www.gstatic.com/companion/icon_assets/keep_2020q4v3_2x.png"); user-select: none;">
 
https://www.gstatic.com/companion/icon_assets/tasks_2021_2x.png"); user-select: none;">
 
https://www.gstatic.com/companion/icon_assets/contacts_2022_2x.png"); user-select: none;">
 
https://fonts.gstatic.com/s/i/googlematerialicons/add/v21/black-24dp/1x/gm_add_black_24dp.png");">
 
News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top