சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் கொடுப்பனவு காசோலை வழங்கும் நிகழ்வானது 12.03. 2025 புதன்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிகாரா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 2024/ 2026 வருடத்தில் உயர்தரத்தில் கல்வி கற்று 2026 ஆம் வருடம் உயர்தர பரீட்சை எழுதும் 108 மாணவர்களுக்கு கடந்த 2024 ஜூலை தொடக்கம் டிசம்பர் வரையான ஆறு மாதங்களுக்கு தலா 9000/= ரூபாய் காசோலையானது பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இப்புலமைப்பரிசானது காத்தான்குடி மத்திய கல்லூரி, காத்தான்குடி மீரா பாலீகா மகா வித்தியாலயம், மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் அல்ஹிரா மகா வித்தியாலயம், அல் அமீன் மகா வித்தியாலயம், புலவர் மணி சரீப்தீன் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உதவி பிரதேச பிரதேச செயலாளர் திருமதிஎம்.எஸ். சில்மியா அவர்களினால் சிப்தொற புலமைப் பரிசு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .எஸ்.தனுஜா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி .பீ.ஜெயராஜ், மற்றும் சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை





மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






" *நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்"*
எனும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவும் , ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுவானது 2025.03.08 ஆந் திகதி சனிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் காத்தான்குடி ரைய்யான் பீச் ஹாடன் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இஸ்லாத்தில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விழிப்பூட்டல் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எஸ்.நுஸ்ரி நழீமி மற்றும் பெண்கள் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் எனும் தலைப்பில் சட்டத்தரணி ஏ. உவைஸ் ஆகியோர் சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தினால் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மேலும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கணக்காளர் திருமதி.கே.சித்திரா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.றஊப் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி Dr.நஸீர்தீன், ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி திருமதி.அனிசா பிர்தௌஸ் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதி நிகழ்வாக இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.







|
ReplyForward
|
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் இன்று (25) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது .
இக்கூட்டத்திற்கு கணக்காய்வு அத்தியட்சகர் ரொபர்ட் அலோசியஸ் ,பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் , மற்றும் கணக்காய்வு திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கணக்காளரினால் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் , கணக்காய்வு பற்றிய விடயங்களின் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு, கணக்குக் கிளை, நிருவாக கிளை, பதிவாளர் கிளை, நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு, சமுர்த்தி கிளை, மற்றும் சமுர்த்தி வங்கிகள், Passport &NIC, சிறுவர் பெண்கள் பிரிவு, ஆகிய பிரிவுகளின் முன்னேற்ற அறிக்கை விளக்க காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப் பட்டது.
அத்துடன் Investigation முறைப்பாட்டின் படி அலுவலக ரீதியான சில பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டதுடன் அதனை சீர் செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மேலும் கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரினால் அலுவலக கடமைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உதவியாளர்கள், கிளைத் தலைவர்கள், மற்றும் பதவி நிலை உதவியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்ச்சி அனுஷ்டித்தல்
தேசிய வாரத்தினை முன்னிட்டு ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு பலம் எனும் தொனிப்பொருளில் உடல் உள ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 06.03.2025 வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களது ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் வளவாளர்களாக Dr.டயான் மற்றும் Dr.லுபோஜிதா கமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா , பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி Dr.நஸீர்தீன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றஊப் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் பொது சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் தொழுநோய் தொடர்பாக தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள், அதனை இலகுவில் கண்டறிந்து குணமடைவதற்கான வழிகள், தொழுநோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை பெறும் இடங்கள் , தொழுநோய் தொடர்பான தெளிவூட்டல்கள் , ஆலோசனைகள் பெறுவதற்கான தொலைபேசி இலக்கங்களும் 0774704286, வழங்கப்பட்டது.
உத்தியோகத்தர்களாகிய நாங்கள் அனைவரும் நாமும் நாம் குடும்பங்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்.களவிஜயங்களை மேற்கொள்ளும் போதும் நிகழ்வுகளை நடாத்தும் போதும் தொழுநோய் சம்பந்தமான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளுமாறும்பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.







காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைத் திணைக்களத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு (22) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் தலைமையில் இக்கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இக் கொடுப்பனவுகள் காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்திற்கு
ரூ. 194500/= உம், வலது குறைந்தோர் அமைப்பிற்கு ரூ.194500/= பெறுமதியான காசோலைகள் பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டன.
இக் காசோலையானது இல்லங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் கொள்வனவு செய்வதற்காக வழங்கி வைக்கப்பட்டதுடன்
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா , சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ.நஜுமுதீன், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


















