Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
காத்தான்குடி பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு செயலணிக் கூட்டம் -2023
காத்தான்குடி பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு செயலணிக் கூட்டமானது 2023.05.15 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான வெவ்வேறு தலைப்புகளில் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி (TOT) வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் நகரசபையினூடாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட செயற்றிட்டம் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்ற விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போது சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் இக் கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.
பிரதேச செயலகத்திற்காக வழங்கப்பட்ட திட்டத்தின் செயற்பாடுகள் கிரமமான முறையில் நடைபெற்று வருகின்றது என்ற விடயத்தை பிரதேச செயலாளர் குறிப்பிட்டதுடன் சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இச் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும்,
பிரதேச செயலக கலாசார பேரவையினூடாக மாணவர்களுக்கான செயற்பாட்டுத் திட்டங்கள் கிரமமான முறையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இக் கூட்டத்திற்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர், மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்,HRDO,நகரசபை உத்தியோகத்தர்,Iware பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள்,
WDO, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





நிலைபேறான வீட்டுத்தோட்டங்களை உருவாக்குதல்-2023*
நிலைபேறான வீட்டுத் தோட்டத்தினை உருவாக்குதல் வேலைத்திட்டத்தின்
கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களின் எண்ணக்கருவில் உருவான 2023 ஆம் ஆண்டில் புதிதாக 300 வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது 2023.05.15 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர்,கௌரவ அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, ஏனைய அதிதிகளாக சமுர்த்தி முகாமையாளர்களான திரு.எம்.ஏ.எம்.சுல்மி, திருமதி.எஸ்.எச்.எம்.முஸம்மில், முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வேலைத்திட்டமானது காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் செயற்படும் 99 சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிதிப் பங்களிப்புடன் தெரிவான 300 வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு முதற் கட்டமாக 108 பேருக்கு கத்தரி, வெண்டி,பாகல்,கெக்கரி,கீரை,பீர் க்கு, ஆகிய பயிர் விதைகள் உள்ளடக்கிய விதைப்பக்கற்றுக்கள் விநியோகிக்கப்பட்டன.ஒரு பாக்கட்டின் பெறுமதி ரூ 320 ஆகும்.
அதனைத் தொடர்ந்து வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான தெளிவூட்டல்களை வளவாளர் விவசாய போதனாசிரியர் திருமதி.முபிதா றமீஸ் அவர்கள் வழங்கி இருந்தார்.
இதன் இரண்டாம் கட்ட நிகழ்வானது 2023.05.17 ஆந் திகதி புதன்கிழமை 192 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
ReplyForward
|









தகவல் அறியும் சட்டம் (RTI) தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு -2023
தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வானது 2023.03.15 ஆந் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.MS.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் 50 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக (Officer's Transparency International) திருமதி.பிரியா போல் ராஜ் மற்றும் திருமதி.ஜவாஹிர் நாகூர் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் அறியும் சட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர்.
இந் நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் திருமதி.SJM.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.MMM.ஜரூப், கிராம உத்தியோகத்தர்கள்,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்விற்கு LIFT NGO (Project Coordinator) திரு. ரீ.சுதர்சன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வு-2023*
மியன்மார் அரசாங்கத்தினால் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு வழங்கப்பட்ட அரிசி கையளிக்கும் நிகழ்வு 18.04.2023 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் சமூகப் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு சுற்றாடல் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் , முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளருமான திரு.MM.நாஸர், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.MMM. ஜரூப், 167A கிராம உத்தியோகத்தர் திருமதி.SNM.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் அரிசிப் பொதியானது மிகவும் பாதிப்பிற்குள்ளான 375 குடும்பங்களுக்கு 20Kg பொதி வழங்கி வைக்கப்படவுள்ளது.இதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 120 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.




























