எமது நோக்கு
இலங்கையின் அதிஉயர் வாழ்க்கைத் தரம் கொண்ட மக்களையுடைய காத்தான்குடி பிரதேசதம்எமது கொள்கை
பயன்விளைவுள்ள பிரதேச மட்ட நிர்வாகத்தினூடாக காத்தான்குடி மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல்.காத்தான்குடி செயலகப் பிரிவு தொடர்பான அடிப்படைத் தகவல்கள்
1. பிரதேசம் பற்றிய தகவல்கள் :
மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரேதேச அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ; மண்முனை வடக்கு, மண்முனைப் பற்று , போரதீவுப் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, கோரளைப் பற்று, காத்தான்குடி, மண்முனை தெற்கு எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு,ஏறாவூர் நகர், கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று வடக்கு என்பவையாகும்.
காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 13344 ஆகும். சனத்தொகை ஆண்கள் 23967 பெண்கள் 24907 மொத்தம் 48874 ஆகும்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரம், கைத்தொழில் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் ஈடுபட்டிருப்பதுடன் வியாபாரமே பிரதான தொழிலாகக் காணப்படுகிறது. தென் கிழக்காசிய நாடுகளில் அதி கூடிய சனத்தொகை அடர்த்தி கொண்ட பிரதேசமாக காத்தான்குடி விளங்குவது ஒரு விசேட அம்சமாக அமைவதுடன் இங்கு வாழுகின்ற மக்கள் அனைவரும் முஸ்லீம்களாகவும் காணப்படுகின்றனர்.
2.இட அமைவு:
மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்திய பகுதியாக விளங்குகின்ற காத்தான்குடிப் பிரதேசம் 2.56km2 நிலப்பரப்பினையும், 1.33km2 நீர்ப்பரப்பினையும் கொண்டுள்ளது. இது மாவட்டத்தின் மொத்தப் பரப்பின் ௦.15% ஆகும்.
3.எல்லைகள்:
காத்தான்குடிப் பிரதேசப் பிரிவின் எல்லைகளாவன:
வடக்கு : மண்முனை வடக்கு
கிழக்கு : வங்காள விரிகுடா (கடல்)
தெற்கு : மண்முனைப் பற்று
மேற்கு : மட்டக்களப்பு வாவி
" கஹ்தான்" என்று அழைக்கப்பட்ட அரேபிய நாட்டிலிருந்து வருகை தந்த ஒரு முஸ்லிம் வியாபாரி இப் பிரதேசத்துப் பெண் ஒருத்தியை மணந்து வாழ்ந்ததன் காரணமாக வரலாற்று ரீதியாக இப் பிரதேசம் "காத்தான்குடி" என்ற பெயர் கொண்டு அழைக்கப்படக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
c. கிராம உத்தியோகத்தர் பிரிவு / நிர்வாக கிராம உத்தியோகத்தர் பிரிவு
காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட பிரதேசமானது 18 நிர்வாக கிராம உத்தியோகத்தர் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளாவான
|
தொ. இல |
கி.உ பிரிவு குறியீடு |
கி.உ பிரிவின் பெயர் |
ஆதிக்கப் பரப்பு (sq.km) |
|
01 |
162 |
காத்தான்குடி - 06 |
0.335 |
|
02 |
162A |
காத்தான்குடி - 06 தெற்கு |
0.42 |
|
03 |
162B |
காத்தான்குடி - 06 மேற்கு |
0.33 |
|
04 |
164 |
காத்தான்குடி - 04 |
0.20 |
|
05 |
164A |
காத்தான்குடி - 05 |
0.45 |
|
06 |
164B |
காத்தான்குடி - 05 தெற்கு |
0.30 |
|
07 |
164C |
காத்தான்குடி - 04 மேற்கு |
0.30 |
|
08 |
165 |
காத்தான்குடி - 03 |
0.20 |
|
09 |
165A |
காத்தான்குடி - 03 மேற்கு |
0.25 |
|
10 |
165B |
காத்தான்குடி - 03 கிழக்கு |
0.285 |
|
11 |
166 |
காத்தான்குடி - 02 |
0.20 |
|
12 |
166A |
காத்தான்குடி - 02 வடக்கு |
0.25 |
|
13 |
167 |
காத்தான்குடி - 01 |
0.25 |
|
14 |
167A |
புதிய காத்தான்குடி வடக்கு |
0.525 |
|
15 |
167B |
புதிய காத்தான்குடி கிழக்கு |
0.446 |
|
16 |
167C |
புதிய காத்தான்குடி தெற்கு |
0.636 |
|
17 |
167D |
புதிய காத்தான்குடி மேற்கு |
0.876 |
|
18 |
167E |
காத்தான்குடி - 01 தெற்கு |
0.25 |
|
Total |
6.503 |
||
தகவல் - திட்டமிடல் பிரிவு, பிரதேச செயலகம் - காத்தான்குடி.















