பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.10.2026 புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முப்படைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்களை வலுப்படுத்துதல், தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.



























