காத்தான்குடி பிரதேச செயலக 2023 ஆம் ஆண்டிற்கான 6வது பிரதேச தினக் கூட்டமானது 2023.10.02 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக் கூட்டத்தின் போது சென்ற பிரதேச தினக் கூட்டத்தில்  Beach Road இல் வீதியில் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாவும் ஏற்கனவே அவ் வீதியில் வாகனத்தடைகள் போடப்பட்டிருந்தும் தற்போது இல்லை எனவும் இதனால் போக்குவரத்திற்கு   தடையும், தாமதமும் ஏற்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டதற்கிணங்க தற்போது போக்குவரத்து தடைகள் குறைந்துள்ள போதிலும் வாகன நெரிசல் குறையவில்லை எனவும் மாற்று ஒழுங்கிற்காக பொலிசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் டெங்கு பிரச்சினை சம்பந்தமாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கையில் டெங்கு களப்பணியானது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தற்போது மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதன் காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்ற வாரம் 26-30 ஆந் திகதி வரை டெங்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தார். பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் களவிஜயத்தினை மேற்கொள்ளும் போது டெங்கு சோதனைகளை மேற்கொள்வதாக பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து காத்தான்குடி 6ஆம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்ன லெப்பை மாவத்தையிலுள்ள நகை உருக்கும் பட்டறையினால் நைற்றஜன் அமிலம்  வெளியிடப்படுவதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும்  அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென பிரதேச செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவிக்கப்பட்டது.
 
அன்வர் பாடசாலை உளநலப்பிரிவு கட்டிட நிலம் பற்றியும்  கூட்டத்தில் பேசப்பட்டது. 
 
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரால்  பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதிநிதிகளிடம்  ஆராயப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்,  செயலாளர் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் அவற்றின் பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

19
அக்2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உளநல மேம்பாட்டை நோக்கமாகக்...

15
அக்2026
அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top