" வலுவான எதிர்காலத்திற்கான தொடங்கவுரை" எனும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2024 கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது  2024.01.01 திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
 
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான அரச சேவை உறுதியுரையானது பிரதேச செயலாளரினால் வாசிக்கப்பட அனைத்து உத்தியோகத்தர்களும் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டனர்.
 
மேலும் பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் 2023 ஆம் ஆண்டு பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் 2024 ஆம் ஆண்டும் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் வெற்றி கொள்வதற்காக அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக மக்களது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் உத்தியோகர்களாகிய நாம் அலுவலகத்தில் உள்வருகை கையொப்பமிட்ட அந்த நிமிடத்திலிருந்து  தங்களது சுய விடயங்களை புறம் தள்ளி  ஒவ்வொரு மணி நேரத்தையும் மக்களின் நலனுக்காக அக்கறையுடன் சேவையாற்ற வேண்டுமெனவும் சென்ற ஆண்டில் எவ்வாறு சிக்கனமான முறையில் அலுவலக செயற்பாடுகளை திறம்பட மேற்கொண்டது போன்று இவ்வாண்டும் அவ்வாறு செயற்பட வேண்டுமெனவும்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.எம்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், மற்றும்  நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பீ.ஜெயராஜ் , சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top