மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் – 2026 நிதி ஒதுக்கீட்டின் கீழ், காத்தான்குடியில் உள்ள பாடசாலைகள் மற்றும் சமூக நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரூபா பத்து லட்சம் பெறுமதியான பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பொருட்கள் மற்றும் வசதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (30) பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,பிரத்தியேக செயலாளர் சட்டமாணி ஈ எம்.றுஸ்வின் (நகரசபை உறுப்பினர்), உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.எம்.சில்மியா, திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஹன்சுல் சிஹானா, நகர சபை உறுப்பினர்களான சல்மா அமீர் ஹம்ஸா, ரிஜாஸ் முகமட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மெத்தைப் பள்ளி வித்தியாலயம், கரீப் நவாஸ் பவுன்டேஷன், பாத்திமா பாலிகா வித்தியாலயம், அன்வர் வித்தியாலயம், தாருஸ்ஸலாம் வித்தியாலயம் ஆகியவற்றின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக குறித்த நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட வசதிகள் மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கல்வித்துறைக்கு முன்னுரிமை வழங்கி, பிரதேசத்தின் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிறைவேற்றும் நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

gdgd2gd3gd4gd5gd1

News & Events

19
அக்2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உளநல மேம்பாட்டை நோக்கமாகக்...

15
அக்2026
அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top