×

செய்தி

Invalid Page Request
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.05.22 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் நடமாடும் சேவையானது எதிர்வரும் 2023.05.27 ஆந் திகதி மட்/ஆசிரியர் கலாசாலையில் நடைபெறவுள்ளதால் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைத்து ஆவணங்களுடனும் முழுமையான முறையில் மக்கள் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடுகளையும்,
ஒழுங்குகளையும் மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
 
நலன்புரி வேலைத்திட்டத்தின் 2ம் கட்ட தெரிவு இறுதிக் கட்டத்தை 80% நிறைவு செய்துள்ளதாகவும் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 25% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்களை மிகவும் தெளிவான முறையில் பெற்றுக் கொண்டு தகுதியானவர்களுக்கு நலன்புரி நன்மைகளை பெற்றுக் கொடுக்குமாறும் இவ் வேலைத்திட்டத்தினை 2023.05.26 ஆந் திகதிக்குள் நிறைவு செய்யப்படள்ளதாகவும்
பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
 
உணவுப் பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தில் 11329 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முழுமையாக முடிவடைந்துளளதாகவும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முடிவு பெறவில்லை எனவும் அதனை விரைவாக செய்து முடிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து காணி உத்தியோகத்தர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்,
சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் ஆகியோரிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு  உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப்,   சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

19
அக்2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உளநல மேம்பாட்டை நோக்கமாகக்...

15
அக்2026
அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top