Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தினக்கொண்டாட்டம் -2022
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினக்கொண்டாட்டமானது 2022.03.08 ஆந் திகதி முற்பகல் 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்கள் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக ஒரு நிமிட இறைவணக்கத்துடன் ,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எம்.ஐ.எம்.ஜவாஹிர் அவர்களினால் வரவேற்புரை இடம்பெற்றது.இந்நிகழ்வில் அதிதிகளாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், பண்பாட்டலுவல்கள் திணைக்கள சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.குணபால, IWARE நிறுவனப் பணிப்பாளர் திருமதி.அனிசா பிர்தௌஸ, ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளரின் தலைமையுரை இடம் பெற்றதோடு பிரதேச பெண் கலைஞர்களின் அறிமுகமும் இடம் பெற்றது.அடுத்த நிகழ்வாக காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தினால் கவியரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வின் தலைவராக கலாபூசணம் காத்தான்குடி பாத்திமா அவர்களும் கவி பாடியோர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், திருமதி.ஜுஸ்லா றமீஸ்(சலனி) , திருமதி.அஜீறா கலீல்தீன் , திருமதி.முபீதா றமீஸ், திருமதி.ஜெஸ்மின் றமீஸ், மற்றும் காத்தான்குடி றுஸ்தா, ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கலாசார மத்திய நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நாடகம்இ குழுப்பாடல் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.சுமையா முஹமட் றஷீட் அவர்களின் பாடல் மற்றும் கவிஞர் றபாய்தீன் அவர்களது மகளிர் தினக் சிறப்புக் கவிதையும் இடம் பெற்றது.திரு.எம்.ஐ.எம்.றம்ஸி (YSO) தொகுத்து வழங்கிய இந்நிகழ்விற்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தலைவர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் உட்பட நிருவாக உறுப்பினர்கள், IWARE நிறுவன அங்கத்தவர்கள்,மற்றும் பெண் எழுத்தாளர்கள், இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளர், இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வானது திருமதி.ஜீ.எம்.எம்.மபாஹிறா (WDO) அவர்களின் நன்றயுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.



சுனாமி திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் -2022
சுனாமி திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடலானது 2022.02.28 ஆந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.குகந்தினி கோபாலசிங்கம் அவர்களது ஏற்பாட்டில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அவர்கள் சுனாமி திட்டம் தயாரித்தல் தொடர்பாகவும், அதன் அவசியம் தொடர்பாகவும், காத்தான்குடியில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புக்கள் இருப்பதனால் இத்திட்டம் மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் திரு.எஸ்.சயந்தன், திரு.எம்.சகீல் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், 167A, 167B, 167C, 167D, 166A, 165B, 162, 162A ஆகிய பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


குறும்படப் பயிற்சிப்பட்டறை - 2022
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான திரு.எம்.ஐ.எம்.ஜவாஹிர், திருமதி.வீ.சிந்து உஷா, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.ஏ.எவ்.நுஹா, ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட குறும்படப் பயிற்சிப் பட்டறையானது 2022.02.22 ஆந் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.ரீ.குணபால ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இப்பயிற்சி பட்டறையின் வளவாளராக காத்தான்குடியைச் சேர்ந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் 'சிறகுநுனி' அமைப்பின் தயாரிப்பாளருமாகிய ஆத்மா ஜாபிர் அவர்கள் கலந்து சிறப்பாக பயிற்சிகளை வழங்கியிருந்தார்.அத்துடன் இப்பயிற்சி பட்டறையில் பாடசாலை மாணவர்கள், பிரதேச கலைஞர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் போன்ற 40 ற்கும் மேற்பட்ட குறும்படம் தயாரிப்பில் ஆர்வமுள்ள கலைஞர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.







சுதந்திர தினக் கொண்டாட்டம் - 2022
சுதந்திர தினக் கொண்டாட்டமானது 2022.02.04 ஆந் திகதி முற்பகல் 8.19 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீர்த்த இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து 02 நிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் இறைவணக்கமும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் கொவிட் 19 கொரோணா தொற்று காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகியிருக்கும் இக்கால கட்டத்தில் அரச உத்தியோகத்தர்களாகிய நாங்கள் மேம்பட்ட சேவையினை வழங்குவதன் மூலம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன் அவர்களது ஒழுங்கமைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் , கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

























