Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசனைக் குழுவினால் வரையப்பட்டுள்ள 05 ஆண்டுத்திட்டத்தினை (2024-2028) சரி பார்த்து சிபாரிசு செய்வதற்கான கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசனைக் குழுவினால் வரையப்பட்டுள்ள 05 ஆண்டுத்திட்டத்தினை (2024-2028) சரி பார்த்து சிபாரிசு செய்வதற்கான கூட்டம் (16) ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தின் போது திணைக்களங்களின் மாவட்ட தலைமைகளால் வழங்கப்பட்ட உள்ளீடுகளை மையப்படுத்தி மேற்படி வரைபுகள் அவற்றிற்குரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.இத் திட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களில் மாற்றம் செய்ய வேண்டிய திட்டங்கள், உள்வாங்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் நீக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பிரதேச செயலாளரால் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களது எழுத்து மூலமான முன்மொழிவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் சில திணைக்களங்கள் தங்களது திட்டங்களின் மாற்றங்கள் தொடர்பாகவும் எதிர் காலத்திட்டங்கள், சேர்க்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கூறப்பட்டதுடன் நீக்கப்பட்டுள்ள விடயத்திட்டங்களும் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு உதவித் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்திக் கட்டமைத்தல் தொடர்பான கூட்டம் -2023
காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்திக் கட்டமைத்தல் தொடர்பான கூட்டமானது (12) ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.
எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமூகத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், NGO's, INGO's உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தின் போது வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை எவ்வாறு ஒழுங்கமைத்தல், சுற்றுலா துறைக்கான வளங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கையாளுதல் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா தொடர்பான Calender தயாரித்தல், சுற்றுச்சூழல், கலாசார ரீதியான பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



காத்தான்குடியில் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக பிரதேச செயலாளர் தலைமையிலான களவிஜயம்
0.10.2023 ஆந் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தல் செயற்பாட்டிற்கான களவிஜயம் ஒன்று ( 12) ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இக் களவிஜயத்தின் போது ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மரம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு அதன் கிளைகளை அகற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.அத்துடன் நீர் வழிந்தோடக் கூடிய தோணாக்களை பார்வையிட்டதுடன் நீர் செல்லத் தடையாக இருக்கின்ற தோணாக்களை நகரசபைக்கு துப்பரவு செய்யுமாறு பணிக்கப்பட்டது.
மேலும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தோணாக்களில் விடப்படுவது அவதானிக்கப்பட்டு குறித்த கடை உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் பொலிஸ் மற்றும் சுகாதார பிரிவினருக்கு உரிய சட்ட நடவடிக்கை பணிமேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த பிரதிப் பணிப்பாளர் ஆகியோரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தோணாக்களில் அதிகளவான குப்பைகள் கொட்டப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசிக்கப்பட்டது.
இக்களவிஜயத்தில் திருமதி.ஆர்.எவ்.அமீன் (LO), திருமதி.எம்.பாஸ்கரன் (DO, Coast Conservation Dept), திருமதி.ஆர்.பாஸ்கரன் (DEO, CEA, District office), KDW.அனுரா(SI, police station,kky) மற்றும் AMM.பஸீர்(SPHI,MOH, kky), MIM.நியாஸ் (AO,UC, kky), MSM.சிம்றி (DMA,DMC,kachcheri), MN.நஜ்மி(DO,NDRSC,Dsoffice, kky) ஆகியோர் கலந்து கொண்டனர்.









34 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டு விழா - 2023
காத்தான்குடி பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் சுவட்டு மைதான நிகழ்வுகளும், சான்றிதழ் வழங்கும் விழாவும் 07/10/2023 ஆந் திகதி சனிக்கிழமை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்ஷாத் அலி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ILM .சாபிர் அவர்களின் தலைமையில் காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.ஜேசுதாசன் கலாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அதிதிகளாக சமூக மேம்பாட்டுக்கான மக்கள் நிறுவன பணிப்பாளர் MIM. ஹாரிஸ் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமா MSM.நூர்தீன் அவர்களும், விளையாட்டு உத்தியோகத்தர் இன்சாத் மொகமட் அலி அவர்களும் மற்றும் முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் NMM.பாயிஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 34 ஆவது இளைஞர் விளையாட்டுப் போட்டியின் குழு மற்றும் தனி விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.






























