Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
தலைமைத்துவப் பயிற்சி ஊடாக உள்ளூர் கதை மரபு மற்றும் உள்ளூர் உணவு தயாரிப்புக்களை அறிந்து கொள்ளல்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தொளஸ் மகே பாண வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் SAM.நலீம் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோரது ஒருங்கிணைப்பில் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி ஊடாக உள்ளூர் கதை மரபு மற்றும் உள்ளூர் உணவு தயாரிப்புக்களை அறிந்து கொள்ளல் பயிற்சி பட்டறை
இடம் பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில்
மட்/மம/பதுரிய்யா வித்தியாலயத்தில் 19,20,21 ஆகிய திகதிகளில் 30 மாணவர்களும், மட்/மம/ மீராபாலிகா தேசியப்பாடசாலையில் 25,26 ஆகிய திகதிகளில் 30 மாணவர்களும் , மட்/மம/அல்அமீன் மகா வித்தியாலயத்தில் 05,10, ஆகிய திகதிகளில் 30 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டுகள் மூலமாக தலைமைத்துவம் பற்றிய தெழிவுபடுத்தல்களுடன் அவர்களுடாக முன்னோர்களின் உள்ளூர் கதைகள் மற்றும் உள்ளூர் உணவு முறைகள் அதன் தயாரிப்புக்கள் பற்றிய தகவல்களைப் பெற்று ஆவணப்படுத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியினை மேற்கொள்வதற்கு பாடசாலை அதிபர்களது முழுமையான ஒத்துழைப்பும் மாணவர்களின் ஆர்வமுடனான பங்களிப்பும் இப் பயிற்சி சிறப்பாக நடைபெறுவதற்கு வழிவகுத்தது எனலாம்.இது போன்ற பயிற்சிகள் மேலும் நடாத்தப்பட வேண்டுமெனவும் இப்பயிற்சியானது புது விதமாக உள்ளதாகவும் மாணவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இப்பயிற்சியினை ம.நிறோசினி தேவி , நண்பி , சமதை
பெண்ணிலைவாத நண்பிகள் குழு ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

|
Reply
Forward |
பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் -2023
பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழு கூட்டமானது 2023.10.17 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் போது 167E கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மட்/ம ம/ஸாவியா மகளிர் வித்தியாலயம் அமைந்துள்ள காணி மாகாண கல்வி திணைக்களத்தின் கோரிக்கைக்கமைவாக கையளிப்பு செய்வதற்கு சிபாரிசு வழங்கப்பட்டதுடன் 2017.03.28 ஆண்டு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவினர் 176B கிராம உத்தியோகத்தர் பிரிவில் உளநலப் பிரிவு அமைப்பதற்கு வழங்கப்பட்ட 50 Perch காணியினை இரத்துச் செய்வது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் ( LUPO) ஆர்.கணேசன், திருமதி.எம்.பாஸ்கரன், (Coast Conservation), மற்றும் ஏ.எல்.பாஸில் (Servey Dept), நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் எம்.செல்வகுமார் (E/Planner) , எம்.ஐ.எம்.நியால் (UC AO) 167B கிராம உத்தியோகத்தர் திருமதி.பஜ்றியா அமிர் அலி, காணிப் பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.கார்த்தீபன், காணிக்கிளை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எம்.எம்.எவ்.ஹஸீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசனைக் குழுவினால் வரையப்பட்டுள்ள 05 ஆண்டுத்திட்டத்தினை (2024-2028) சரி பார்த்து சிபாரிசு செய்வதற்கான கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசனைக் குழுவினால் வரையப்பட்டுள்ள 05 ஆண்டுத்திட்டத்தினை (2024-2028) சரி பார்த்து சிபாரிசு செய்வதற்கான கூட்டம் (16) ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தின் போது திணைக்களங்களின் மாவட்ட தலைமைகளால் வழங்கப்பட்ட உள்ளீடுகளை மையப்படுத்தி மேற்படி வரைபுகள் அவற்றிற்குரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.இத் திட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களில் மாற்றம் செய்ய வேண்டிய திட்டங்கள், உள்வாங்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் நீக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பிரதேச செயலாளரால் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களது எழுத்து மூலமான முன்மொழிவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் சில திணைக்களங்கள் தங்களது திட்டங்களின் மாற்றங்கள் தொடர்பாகவும் எதிர் காலத்திட்டங்கள், சேர்க்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கூறப்பட்டதுடன் நீக்கப்பட்டுள்ள விடயத்திட்டங்களும் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு உதவித் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.