Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
பிரதேச தினக் கூட்டம் -2023
காத்தான்குடி பிரதேச செயலக 2023 ஆம் ஆண்டிற்கான 6வது பிரதேச தினக் கூட்டமானது 2023.10.02 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் போது சென்ற பிரதேச தினக் கூட்டத்தில் Beach Road இல் வீதியில் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாவும் ஏற்கனவே அவ் வீதியில் வாகனத்தடைகள் போடப்பட்டிருந்தும் தற்போது இல்லை எனவும் இதனால் போக்குவரத்திற்கு தடையும், தாமதமும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க தற்போது போக்குவரத்து தடைகள் குறைந்துள்ள போதிலும் வாகன நெரிசல் குறையவில்லை எனவும் மாற்று ஒழுங்கிற்காக பொலிசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் டெங்கு பிரச்சினை சம்பந்தமாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கையில் டெங்கு களப்பணியானது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தற்போது மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதன் காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்ற வாரம் 26-30 ஆந் திகதி வரை டெங்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தார். பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் களவிஜயத்தினை மேற்கொள்ளும் போது டெங்கு சோதனைகளை மேற்கொள்வதாக பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காத்தான்குடி 6ஆம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்ன லெப்பை மாவத்தையிலுள்ள நகை உருக்கும் பட்டறையினால் நைற்றஜன் அமிலம் வெளியிடப்படுவதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென பிரதேச செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவிக்கப்பட்டது.
அன்வர் பாடசாலை உளநலப்பிரிவு கட்டிட நிலம் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரால் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதிநிதிகளிடம் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர், செயலாளர் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் அவற்றின் பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.





காத்தான்குடியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவும் மற்றும் சமுர்த்தி பிரிவும் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் தின நிகழ்வுவினை 2023.10.01 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்.பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் பொறியியலாளரும் சிரேஸ்ட விரிவுரையாளர் ,(தென்கிழக்கு பல்கலைக்கழகம்) ஏ.எல்.றிசாத் அவர்கள் பிள்ளை வளர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில் பிள்ளைகளின் உடல் உள , கல்வி, சுகாதாரம், போசாக்கு போன்றவை பிள்ளை வளர்ப்பில் முக்கியமானவை ஆகும். யப்பான்,சீனா, பின்லாந்து, ஆகிய நாடுகளில் பிள்ளை வளர்ப்பு முறை வித்தியாசமானது. அங்கு பிள்ளைகளின் உடல் உள வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.சீனாவில் பெற்றோர் பிள்ளை விழுந்து விடும் என தடுப்பதை விட பிள்ளை விழுந்து எழுந்து கற்கும் அனுபவ கல்விக்கு முன்னுரிமை வழங்குகின்றது.
மேலும் உணவு எனும் விடயத்தில் 80% உணவு உட்கொள்ள வேண்டும் 20% வயிற்றில் இடைவெளி இருக்க வேண்டும் இந்த விடயம் இஸ்லாத்திலும் கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதன் 40 வயதிற்கு பின்னர் தான் வாழ ஆரம்பிக்கின்றான்.
அதுவரை வளர்க்கப்பட வேண்டியவனாக இருக்கின்றான். மனிதன் உழைப்பதன் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான் அந்த மகிழ்ச்சியான வாழ்வை பெறுவதற்கு சிறந்த பிள்ளை வளர்ப்பு, உணவு முறைமை என்பன முக்கியமாகின்றது. Ikigai எனும் நூலில் Japanese secret to long and happy life பற்றி கூறப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கம், சுகாதார மேம்பாடு என்பது முக்கியமானது போன்ற பல்வேறு சிறப்பான கருத்தாழம் நிறைந்த விடயங்களை சிறுவர் தின சிறப்புரைகளில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்கள், நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் நன்னடத்தை அலுவலகம்,நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் நிலையம், பணிப்பாளர் (Iware), பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி, நிறைவேற்றுப் பணிப்பாளர் பெண்கள் காப்பகம், காத்தான்குடி, தலைவர்,ஜம்இஈதுல்லா உலா, தலைவர், சிறுவர் அபிவிருத்தி நிலையம், சட்டத்தரணி எம்.உவைஸ் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது பாலர் பாடசாலை சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கெக்குலு சிறார்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.






























