காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவும் மற்றும் சமுர்த்தி பிரிவும் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் தின நிகழ்வுவினை 2023.10.01 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்.பெற்றது.
 
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் பொறியியலாளரும் சிரேஸ்ட விரிவுரையாளர் ,(தென்கிழக்கு பல்கலைக்கழகம்) ஏ.எல்.றிசாத் அவர்கள் பிள்ளை வளர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில் பிள்ளைகளின் உடல் உள , கல்வி, சுகாதாரம், போசாக்கு போன்றவை பிள்ளை வளர்ப்பில் முக்கியமானவை ஆகும். யப்பான்,சீனா, பின்லாந்து, ஆகிய நாடுகளில் பிள்ளை வளர்ப்பு முறை வித்தியாசமானது. அங்கு பிள்ளைகளின் உடல் உள வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.சீனாவில் பெற்றோர் பிள்ளை விழுந்து விடும் என தடுப்பதை விட பிள்ளை விழுந்து எழுந்து கற்கும் அனுபவ கல்விக்கு முன்னுரிமை வழங்குகின்றது.
மேலும் உணவு எனும் விடயத்தில் 80%  உணவு உட்கொள்ள வேண்டும் 20% வயிற்றில் இடைவெளி இருக்க வேண்டும் இந்த விடயம் இஸ்லாத்திலும் கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதன் 40 வயதிற்கு பின்னர் தான் வாழ ஆரம்பிக்கின்றான்.
அதுவரை வளர்க்கப்பட வேண்டியவனாக இருக்கின்றான். மனிதன் உழைப்பதன் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான் அந்த மகிழ்ச்சியான வாழ்வை பெறுவதற்கு சிறந்த பிள்ளை வளர்ப்பு, உணவு முறைமை என்பன முக்கியமாகின்றது. Ikigai எனும் நூலில் Japanese secret to long and happy life பற்றி கூறப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கம், சுகாதார மேம்பாடு என்பது முக்கியமானது போன்ற பல்வேறு சிறப்பான கருத்தாழம் நிறைந்த விடயங்களை சிறுவர் தின சிறப்புரைகளில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிகழ்வின் அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்கள், நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் நன்னடத்தை அலுவலகம்,நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் நிலையம், பணிப்பாளர் (Iware), பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி, நிறைவேற்றுப் பணிப்பாளர் பெண்கள் காப்பகம், காத்தான்குடி, தலைவர்,ஜம்இஈதுல்லா உலா, தலைவர், சிறுவர் அபிவிருத்தி நிலையம், சட்டத்தரணி எம்.உவைஸ் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந் நிகழ்வின் போது பாலர் பாடசாலை சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கெக்குலு சிறார்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
 
 
 
காத்தான்குடியில் காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்தி கட்டமைத்தல் தொடர்பாக தங்குமிட வசதி வழங்குனர்களுடனான கூட்டமானது 2023.09.26ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா துறையில் தங்குமிட வசதி வழங்குனர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும், சுற்றுலா துறைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்துதல், அதனை எவ்வாறு ஒழுங்கு படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
 
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், காத்தான்குடி நகரசபை செயலாளர், மற்றும் தங்குமிட வசதி வழங்குனர் சங்க உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக காத்தான்குடியில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையானது சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலிலும் 26,27,30, ஆகிய திகதிகளில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
 
அந்தவகையில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகக்கூடிய ஆபத்தான இடங்களை பார்வையிட்டு அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது  (25) ஆந் திங்கட்கிழமை திகதி  பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக் கூட்டத்தின் போது அனைத்து உத்தியோகத்தர்களும் KPI யில் குறிப்பிட்டவாறு மூன்றாம் காலாண்டிற்கான செயற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறு பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
அடுத்து சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்காதவர்கள் மேன்முறையீடு செய்ய முடியாது எனவும் சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்ட 3354 பயனாளிகளில் 3058 பேருக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் 2153 பயனாளிகளுக்கு பணம் வைப்பிலிடப் பட்டுள்ளது.905  பேருக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சரிபார்க்கப்பட்டதன் பின் அவர்களுக்கான பணம் வைப்பிலிடப்படுமென சமூக நலன்புரி  அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும்  சமூக நலன்புரி நன்மைகள் சபையினால் நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டுக் குழுவினால் மேன்முறையீடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
அதனைத் தொடர்ந்து கருத்திட்ட முகாமையாளர், DCO, கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
 
இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top