Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
சிறுவர் அபிவிருத்தி தொடர்பான ஊக்குவிப்பு செயலமர்வு
காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான ஊக்குவித்தல் செயலமர்வு 2023.10.25 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் (Civil) பீட விரிவுரையாளர் ஏ.எல்.றிஷாத் அவர்கள் கலந்து கொணடமை சிறப்பம்சமாகும்.
இச் செயலமர்வில் மகிழ்ச்சிகரமான குடும்பத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் திறமையானவர்களாகவும் புதுமையானவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
கற்றலிலும், உணவுப் பழக்கங்களிலும் தற்போதைய பிள்ளைகள் புதுமையை அதிகமாக விரும்புகிறார்கள். பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளை அவர்களது விருப்பங்களுக்கு செயற்பட விட வேண்டும்.அவர்களை வளர்க்க வேண்டுமே தவிர மேய்க்க கூடாது.
நாம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.நாம் செய்யும் நற்செயல்களைப் பார்த்து அவர்கள் பழகிக் கொள்வார்கள். வாசிப்பு பழக்கம், விளையாட்டு, ஆடல் , பாடல் போன்றவற்றை அவர்களுடன் சேர்ந்து செய்து அவர்களை பாராட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில் நாம் குழந்தைகளுடன் நன்றாக பேச வேண்டும், அவர்களது கதைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டு அவர்களது கேள்விகளுக்கு அவர்களுக்கு புரியும்படி பதில் கூறவேண்டும், ஒரு நாள் 24 மணித்தியாலத்தை மூன்று எட்டாகப் பிரித்து முதல் எட்டு மணித்தியாலத்தையும் வழமையான வேலைக்காகவும் அடுத்து எட்டு மணித்தியாலத்தை ஓய்வு, தூக்கத்திற்கும் இறுதி எட்டு மணித்தியாலத்தை குடும்பம், நல்ல நண்பர்கள், கடவுள் நம்பிக்கை, சுகாதாரம், பொழுதுபோக்கு, சந்தோசம், சேவைகள், சிரிப்பு போன்றவற்றுக்காக கழித்தால் மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம் எனவும் மிகவும் பிள்ளைகளின் வளர்ப்பு முறை தொடர்பான தெளிவுபடுத்தல்களை வளவாளர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பிள்ளை வளர்ப்பு தொடர்பான தெளிவினை பெற்றுக் கொண்டமை அவர்களது பின்னூட்டலிலிருந்து அறிய முடிகிறது.







சமுர்த்தி ரன்விமன வீடு கையளிக்கும் நிகழ்வு -2023
தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடானது கையளிக்கும் நிகழ்வு 2023.10.23 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
இவ்வீடானது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 750000/= நிதியுதவியுடனும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சக்காத் திட்டத்தில் 750000/=
நிதிப் பங்களிப்பும் அத்துடன் ஏனைய சில தனவந்தர்களின் 300000/= நிதிப் பங்களிப்புடனும் 180000 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடானது 167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எஸ்.எவ்.சபானா எனும் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 250000/= நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மூன்று வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஆரிபா ஜமநுல்லா கலந்து கொண்டதுடன் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா , கணக்காளர் செல்வி.கே.சித்ரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ்,சமுர்த்தி முகாமையாளர்கள், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.









வாணி விழா -2023
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வாணி விழா கொண்டாட்டமானது 2023.10.23 ஆந




திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மஞ்சந்தொடுவாய் சிறி சித்தி விநாயகர் ஆலயத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இவ் விழாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சிறார்களினால் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் அவர்களது திறமைகளைப் பாராட்டி பிரதேச செயலாளரால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் விழாவினை காத்தான்குடி பிரதேச செயலக இந்து உத்தியோகத்தர்கள் மிகவும் இறைபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் -2023
பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழு கூட்டமானது 2023.10.17 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் போது 167E கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மட்/ம ம/ஸாவியா மகளிர் வித்தியாலயம் அமைந்துள்ள காணி மாகாண கல்வி திணைக்களத்தின் கோரிக்கைக்கமைவாக கையளிப்பு செய்வதற்கு சிபாரிசு வழங்கப்பட்டதுடன் 2017.03.28 ஆண்டு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவினர் 176B கிராம உத்தியோகத்தர் பிரிவில் உளநலப் பிரிவு அமைப்பதற்கு வழங்கப்பட்ட 50 Perch காணியினை இரத்துச் செய்வது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் ( LUPO) ஆர்.கணேசன், திருமதி.எம்.பாஸ்கரன், (Coast Conservation), மற்றும் ஏ.எல்.பாஸில் (Servey Dept), நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் எம்.செல்வகுமார் (E/Planner) , எம்.ஐ.எம்.நியால் (UC AO) 167B கிராம உத்தியோகத்தர் திருமதி.பஜ்றியா அமிர் அலி, காணிப் பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.கார்த்தீபன், காணிக்கிளை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எம்.எம்.எவ்.ஹஸீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.






















