Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலணியினரின் பிரதேசமட்ட திட்டமிடல் 2ம் அமர்வு பயிற்சி பட்டறை
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலணியினரின் பிரதேசமட்ட திட்டமிடல் 2ம் அமர்வு பயிற்சி பட்டறையானது 2023.11.06 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் IWARE நிறுவனத்தின் பங்களிப்புடன் காத்தான்குடி Beachway hotelல் இடம் பெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் திருமதி. சுபத்திரா யோகசிங்கம் மற்றும் A.சொர்ணலிங்கம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் காத்தான்குடியில் இயங்கி வருகின்ற GBV Forum இன் செயற்பாடுகளை நெறிப்படுத்தி செயலணிக்கான Terms of Reference ஐ வரைவதன் மூலம் மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்தது பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை கையாளும் செயற்திறனான பொறிமுறைகளை உருவாக்குதல் தொடர்பில் பல்வேறு தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, காழி நீதிபதி, சமுர்த்தி தலைமை முகாமையாளர், கிராம உத்தியோகத்தர் நிர்வாக உத்தியோகத்தர், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர், மத்தியஸ்த சபை தவிசாளர், பொலிஸ் உத்தியோகத்தர, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,ஊடகவியலாளர் கள் என பலரும் கலந்து கொன்டனர்.









பிரதேச தினக் கூட்டமும் மாவட்ட ஐந்தாண்டுத் திட்ட சரிபார்த்தல் கூட்டமும் -2023
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கா ஏழாவது பிரதேச தினக் கூட்டமானது ( 07) ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் கடந்த பிரதேச தினக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட 6ம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்ன லெப்பை மாவத்தையிலுள்ள நகை உருக்கும் பட்டறையினால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக பிரதேச சுற்றாடல் அதிகாரியிடம் (மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை) நகை உருக்கும் பட்டறை அமைப்பதற்காக ஏன் அனுமதி வழங்கப்பட்டது சம்பந்தமாக பிரதேச செயலாளரால் வினவப்பட்டது.
மேலும் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச செயலாளரால் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பாக (2024-2028) அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய திட்டங்கள், திணைக்களத்தினால் வழங்கப்பட்ட Proposal தொடர்பான Summery விளக்க காட்சிகள் (Presentation) மூலம் DCO வினால் விளக்கிக் காட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜாநிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர் செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









காத்தான்குடி பிரதேச செயலகத்தில் டெங்கு சிரமதானம்
பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் வழிகாட்டலிலும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி .எம்.எஸ்.சில்மியா
அவர்களின் மேற்பார்வையில் டெங்கு சிரமதானம் இன்று (03) வெள்ளிக்கிழமை அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.


மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழா 2023 செப்டம்பர் 18, 2023 இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்,அரசரடி.
இத்திரைப்பட விழாவானது "கிழக்கு பிராந்தியத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல்" எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கையில் சமூக ஒத்திசைவு மற்றும் சமாதானத்தை வலுப்படுத்துதல் (SCOPE) எனும் திட்டத்தால் முன்னெடுக்கப்பட்டது. SCOPE திட்டமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் ஃபெடரல் வெளியுறவு அலுவலகம் இணைந்து நிதி உதவி செய்யும் கூட்டு முயற்சியாகும். நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்
அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுடன் இணைந்து The Deutsche Gesellschaft für
Internationale Zusammenarbeit (GIZ) GmbH ஆல் அமுல்படுத்தப்படுகிறது.
இத்திட்டமானது இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான மற்றும் வளமான சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்கோடு நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
இந்நோக்கத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாணத்தில் செப்டம்பர் 11 முதல் 21 வரை ஒரு சர்வதேச திரைப்பட விழா வை அம்பாறை (13,14 தெ.கி.ப), மட்டக்களப்பு (18,19), திருகோணமலை (20,21) ஆகிய மாவட்டங்களில் நடத்தியிருந்தது.
மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழா 2023 ன் முன் திரைப்பட விழா (Pre-Festival) செப்டம்பர் 18 இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூக நல்லிணக்க மையத்துடன் (SRC) இணைந்து நடத்தப்பட்டது. இவ்விழாவில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பிரதேச சகவாழ்வு சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் உட்பட 80 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
குறித்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேசம் சார்பாக கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி கூறும் முகமாக புதன்கிழமை நவம்பர்.01.2023ம் திகதி SCOPE திட்டத்தின் கலை மற்றும் தொடர்பாடல் பங்காண்மைக்கான ஆலோசகர் ஏ.சி. முஹம்மட் மாஹிர் மற்றும் மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஐ. ஜாபிர் ஆகியோர் பிரதேச செயலகத்திற்கு நேரடியாக வருகை தந்து பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களிடம் நினைவுச்சின்னம் ஒன்றினை கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக நல்லிணக்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.சபீர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.சிந்துஉஷா ஆகியோர் கலந்து கொண்டனர்..






















