Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான 16 நாள் செயல்வாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகமும் IWARE மகளிர் அமைப்பும் இணைந்து சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்புடன் 2023.12.12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பாடசாலை மாணவிகள் மற்றும் GBV Forum பங்குதாரர்களுக்கும் இரண்டு கட்டங்களாக செயலமர்வு காத்தான்குடி Beach Way Hotel இல் இடம்பெற்றது.
முதல் கட்டமாக மட்/ அல் அமீன் வித்தியாலயம் மற்றும் மட்/பதுரியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 10,11 ல் கல்வி கற்கும் 350 மாணவிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளவாளராக பெண் நோயியல் வைத்திய நிபுணர் Dr.சிராஜ் அவர்கள் கலந்து கொண்டு விழிப்பூட்டல்களை வழங்கியிருந்தனர்.
அடுத்து இரண்டாம் கட்ட அமர்வானது GBV Forum பங்குதாரர்களுக்கு நடைபெற்றது.
இச் செயலமர்வின் வளவாளராக பெண் நோயியல் வைத்திய நிபுணர் Dr.சிராஜ் மற்றும் உளநல வைத்திய அதிகாரி Dr.Daan ஆகியோர் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் MS.சில்மியா,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர், MOH, பொலிஸ் சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி, சிறுவர் நன்நடத்தை திணைக்கள பொறுப்பதிகாரி, மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், PHM, SPHM, PHI , SPHI ஆகியோர் கலந்து கொண்டனர்.
.



.



உலக நீரிழிவு தினம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு தொற்றாநோய்கள் மற்றும் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது 05.12.2023,06.12.2023 ஆந் திகதிகளில் மட்/மம/மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் மட்/மம/மீராபாலிகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம் பெற்றது.
மட்/மம/மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் 2023.12.06 இடம் பெற்ற செயலமர்வானது பொறுப்பாசிரியர் முபீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் கா.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தொற்றா நோய்களுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி E.உதயகுமார், பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் , மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் SPHI,PHI, தொற்றா நோய்கள் மற்றும் நீரிழிவு தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
































