Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
காத்தான்குடியில் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை (02) ஆந் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களுக்கு வருகை தர முடியாமல் தங்களது வீடுகளில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு காத்தான்குடி ஹைறாத் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் சமைத்த உணவு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இக் களவிஜயத்தின் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சயந்தன், மாவட்ட இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர் சுரேஸ் , மாவட்ட ஊடக தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







2024 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
" வலுவான எதிர்காலத்திற்கான தொடங்கவுரை" எனும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2024 கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது 2024.01.01 திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான அரச சேவை உறுதியுரையானது பிரதேச செயலாளரினால் வாசிக்கப்பட அனைத்து உத்தியோகத்தர்களும் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் 2023 ஆம் ஆண்டு பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் 2024 ஆம் ஆண்டும் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் வெற்றி கொள்வதற்காக அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக மக்களது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் உத்தியோகர்களாகிய நாம் அலுவலகத்தில் உள்வருகை கையொப்பமிட்ட அந்த நிமிடத்திலிருந்து தங்களது சுய விடயங்களை புறம் தள்ளி ஒவ்வொரு மணி நேரத்தையும் மக்களின் நலனுக்காக அக்கறையுடன் சேவையாற்ற வேண்டுமெனவும் சென்ற ஆண்டில் எவ்வாறு சிக்கனமான முறையில் அலுவலக செயற்பாடுகளை திறம்பட மேற்கொண்டது போன்று இவ்வாண்டும் அவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.எம்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பீ.ஜெயராஜ் , சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுனாமிப் பேரலையின் 19 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுனாமிப் பேரழிவு காரணமாக உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் வகையிலும் அனர்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சுனாமிப் பேரலையின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது 2023.12.26 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.20 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி யானது அரைக்கம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரினால் அனர்த்த முன்னாயத்தங்கள் சம்பந்தமான விடயங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணப்படும் முகாமைத்துவ குழுக்கள் அனர்த்தம் ஏற்படுகின்ற வேளையில் எவ்வாறு செயற்பட வேண்டும். அனர்த்தத்திலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம். எம்.எம்.ஜரூப் மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







HUNGRY BLAST -2023 விற்பனைக் கண்காட்சி
சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி பிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் Hungry Blast விற்பனை கண்காட்சியானது 2023.12.18 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறதர் அவர்களது தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் விற்பனை கண்காட்சியில் இனிப்பு பண்டங்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் போன்றவைகள் முற்பகல் 9.30 - 4.00 மணிவரையும் விற்பனை செய்யப்பட்டது.
இவ் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி
எம்.எஸ்.சில்மியா, சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்




























