Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
பாடசாலை மாணவர்களுக்கான கதை கூறுதல் போட்டி
பாடசாலை மாணவர்களுக்கான கதை கூறுதல் போட்டி
தொளஸ் மகே பஹன வேலைத்திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப்பிரிவின் ஒழுங்கமைப்புடன் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களுக்கான கதை கூறுதல் போட்டியானது 2023.12.13 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியில் 120 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக் காட்டியிருந்தார்கள்.
இப் போட்டியில் மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், யோ.தனுஷியா, பிரதேச செயலகம் , மண்முனை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.புஸ்பகீதா, மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வ.அருணகிரிநாதன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் நளீம், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு செவிப்பறை உபகரணம் வழங்கி வைத்தல்.
முதியோர் தேசிய செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 60 வயதிற்கு மேற்பட்ட 07 முதியோர்களுக்கு செவிப்பறை உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு 2023.12.15 ஆந் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி.எச்.எம்.ஹனாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.







நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக சிறுவர் பெண்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகம் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கான நிவாரணங்கள் தொடர்பான பயிற்சி செயலமர்வு
Legal Aid Commission சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக சிறுவர் பெண்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகம் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கான நிவாரணங்கள் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2023.12.14 ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் சிறுவர் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.ஆர்.வீ.றஸ்மீன் அவர்களது ஒருங்கிணைப்பில் IWARE அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இச்செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, மற்றும் நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப் , நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ,
சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளவாளர்களாக சட்டத்தரணி FX.விஜயகுமார், LLB,MPhil கே.கிறிஸ்ணகுமார், நுகர்வோர் அதிகாரசபையின் Investigation Officer அகமட் நபார், மற்றும் ரீ.சுதர்சன், சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளான திருமதி.மிருதினி சுரேஸ்குமார், திருமதி.கஜாலினி ஹரிபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





150 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியின் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் ஆரம்ப நிகழ்வு
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள பாடநெறியின் 2ம் கட்ட ஆரம்ப நிகழ்வு 2023.12.14 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பாடநெறியில் 71 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளராக என்.துஜோகாந் அவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆரம்ப நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.




























