Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
கலைஞர்களுக்கு உலருணவுப் பொதி வழங்குதல்
கலைஞர் சுவதம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும் அறிவுறுத்தல்களுக்கமைவாகவும் காத்தான்குடி கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் கலைஞர்களுக்கு உலருணவுப் பொதி வழங்கும் நிகழ்வு ( 30) திங்கட்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
அந்தவகையில் உதுமா லெப்பை முஹமட் ஹனீபா (பாவா வயது 70), அகமது லெப்பை அப்துல் காதர் (வயது 85) ஆகிய இரு கலைஞர்களுக்கு 2500/= பெறுமதியான ( சிவப்பு சோற்றரிசி, அரிசி மாவு, சமபோஷ, கடலை, கௌப்பி, நெத்தலி)
உலருணவுப் பொதி உதவிப் பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் நளீம், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.



சமுர்த்தி தேசிய சம்மேளனம் " பிரஜா ஹரசர" விருது வழங்கும் விழா
சமுர்த்தி தேசிய சம்மேளனம் " பிரஜா ஹரசர" விருது வழங்கும் விழாவானது 2023.10.30 ஆந் திகதி புதன்கிழமை மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம் பெற்றது.
இவ் விழாவில் சமுர்த்தி உத்தம பூஜா சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் பிரதேச அமைப்புக்கான பாராட்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 167C கிராம உத்தியோகத்தர் பிரிவு தலிபான் சமுதாய அடிப்படை அமைப்பு முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
இவ் விருதினைப் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (30) பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இவ்விருதினை பெற்றுக் கொள்வதற்கு வழிப்படுத்திய பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர், மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், தலிபான் சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் இவ் விருதினைப் பெறுவதற்கான முக்கிய காரணம் அவர்கள் நிறுவன ரீதியான செயற்பாடுகள் மட்டுமன்றி சமூகம் மற்றும் சூழல் சார்ந்த செயற்பாடுகளை செய்ததுடன் அது தொடர்பான ஆவணங்களையும் சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டமையுமேயாகும். எனவே எந்த செயற்பாட்டையும் செய்யும் போது ஆவணங்களை சரியான முறையில் பேணப்படுதல் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.









கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.10.30 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் Child unit officer's, Land branch officer's, DO(NADA), கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் DO (Agriculture), HRDA, DO(Skill ), RDO, Science &Teachnology Officer, ஆகியோரிடம் தங்களது வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





சிறுவர் அபிவிருத்தி தொடர்பான ஊக்குவிப்பு செயலமர்வு
காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான ஊக்குவித்தல் செயலமர்வு 2023.10.25 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் (Civil) பீட விரிவுரையாளர் ஏ.எல்.றிஷாத் அவர்கள் கலந்து கொணடமை சிறப்பம்சமாகும்.
இச் செயலமர்வில் மகிழ்ச்சிகரமான குடும்பத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் திறமையானவர்களாகவும் புதுமையானவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
கற்றலிலும், உணவுப் பழக்கங்களிலும் தற்போதைய பிள்ளைகள் புதுமையை அதிகமாக விரும்புகிறார்கள். பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளை அவர்களது விருப்பங்களுக்கு செயற்பட விட வேண்டும்.அவர்களை வளர்க்க வேண்டுமே தவிர மேய்க்க கூடாது.
நாம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.நாம் செய்யும் நற்செயல்களைப் பார்த்து அவர்கள் பழகிக் கொள்வார்கள். வாசிப்பு பழக்கம், விளையாட்டு, ஆடல் , பாடல் போன்றவற்றை அவர்களுடன் சேர்ந்து செய்து அவர்களை பாராட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில் நாம் குழந்தைகளுடன் நன்றாக பேச வேண்டும், அவர்களது கதைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டு அவர்களது கேள்விகளுக்கு அவர்களுக்கு புரியும்படி பதில் கூறவேண்டும், ஒரு நாள் 24 மணித்தியாலத்தை மூன்று எட்டாகப் பிரித்து முதல் எட்டு மணித்தியாலத்தையும் வழமையான வேலைக்காகவும் அடுத்து எட்டு மணித்தியாலத்தை ஓய்வு, தூக்கத்திற்கும் இறுதி எட்டு மணித்தியாலத்தை குடும்பம், நல்ல நண்பர்கள், கடவுள் நம்பிக்கை, சுகாதாரம், பொழுதுபோக்கு, சந்தோசம், சேவைகள், சிரிப்பு போன்றவற்றுக்காக கழித்தால் மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம் எனவும் மிகவும் பிள்ளைகளின் வளர்ப்பு முறை தொடர்பான தெளிவுபடுத்தல்களை வளவாளர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பிள்ளை வளர்ப்பு தொடர்பான தெளிவினை பெற்றுக் கொண்டமை அவர்களது பின்னூட்டலிலிருந்து அறிய முடிகிறது.


























