Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்காக மாணவர் தலைவர்களுக்கான இரண்டாம் நாள் விழிப்புணர்வு செயலமர்வு
No Drugs நாங்கள் Youth "போதைப் பொருள் அற்ற இளைஞர் தலைமுறை " எனும் தொனிப்பொருளில் போதைப் பொருள் தடுப்பிற்காக மாணவர் தலைவர்களுக்கான இரண்டாம் நாள் விழிப்புணர்வு செயலமர்வானது 2023.11.13 ஆந் திகதி திங்கட்கிழமை
உதவி பிரதேச செயலாளர் திருமதி. MS. சில்மியா அவர்களது
தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி. ஜேசுதாசன் கலாராணி அவர்கள் அதிதியாக கலந்துகொண்டனர்.
இச் செயலமர்வில் காத்தான்குடி மீரா பாலிகா , மத்திய கல்லூரி, மற்றும் காங்கேயனோடை அல் அக்ஸா ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவர் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வின் வளவாளர்களாக பிரதேச செயலக போதை முற்தடுப்பு உத்தியோகத்தர்களான P.சந்திர காந்தன், S.கோவிந்தராசா, CRPO திருமதி. உர்மிலா, நீதி மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் M. றசூல்ஸா, WDO திருமதி. URB. றஸ்மின், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவின் பயிற்றுவிப்பாளர் S. சதீஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர் தலைவர்களுக்கு சான்றிதழ்களை உதவி பிரதேச செயலாளர் , மக்கள் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேசபந்து அல்-ஹாஜ். MIM.ஹாரிஸ் (JP), முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் NM. பாயிஸ் மற்றும் வளவாளர்கள் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.







போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்காக இளைஞர் தலைவர்களுக்கான முதலாம் நாள் விழிப்புணர்வு செயலமர்வு
No Drugs நாங்கள் Youth "போதைப் பொருள் அற்ற இளைஞர் தலைமுறை " எனும் தொனிப்பொருளில் போதைப் பொருள் தடுப்பிற்காக இளைஞர் தலைவர்களுக்கான முதலாம் நாள் விழிப்புணர்வு செயலமர்வானது 2023.11.12 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கிழமை
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் இளைஞர் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக போதை முற்தடுப்பு உத்தியோகத்தர்களான P.சந்திர காந்தன், S.கோவிந்தராசா, WDO திருமதி. URB. றஸ்மின், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவின் பயிற்றுவிப்பாளர் செல்வி.S.சுஜிவா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் தலைவர்களுக்கு
வளவாளர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.



நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் -2023
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது 2023.11.09 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்ரி அவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரால் கணக்குக்கிளை, காணிக்கிளை, திட்டமிடல் கிளை, மற்றும் பதிவாளர் கிளை , சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு ஆகிய பிரிவுகள் தொடர்பான அறிக்கைகள் விளக்க காட்சிகள்(Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஆலோசனைகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் கிளைத்தலைவர்கள், பதவி நிலை உதவியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கணக்காளர் செல்வி.கே.சித்ரா அவர்களின் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.



மகளிர் மகா சங்க கூட்டம் மற்றும் ஊதியமற்ற பராமரிப்பு பணிப்பகுப்பாய்வு தொடர்பான பயிற்சிப் பட்டறை
காத்தான்குடி மகளிர் மகா சங்க கூட்டம் மற்றும் ஊதியமற்ற பராமரிப்பு பணிப்பகுப்பாய்வு தொடர்பான பயிற்சிப் பட்டறையானது 2023.11.09 ஆந் திகதி வியாழக்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில் மகளிர் மகா சங்க உறுப்பினர்கள் 45 பேர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி நெறியில் திருமதி.யூ.ஆர்
வீ.றஸ்மின்(WDO) மற்றும் திருமதி.பீ.கௌரீசன் (CA) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் ஊதியமற்ற பராமரிப்பு வேலைகள் பற்றிய பகுப்பாய்வு, பால்நிலை வகிபங்கு தொடர்பான பயிற்சிகளும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் செயற்பாடுகள் பற்றிய தெளிவவூட்டல்களும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திருமதி.எச்.வீ.எம்.சில்மி தாஜுதீன் (WDFA), திருமதி.யூ.சுவேந்திரன்(CRPO), மற்றும் எஸ்.கோவிந்தராசா, பீ.சந்திரகாந்தன் ( Drugs prevention), திருமதி.கிருத்திகா பகலவன் ( DO) ஆகியோர் கலந்து கொண்டனர்.




























