உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு தொற்றாநோய்கள் மற்றும் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது 05.12.2023,06.12.2023 ஆந் திகதிகளில் மட்/மம/மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் மட்/மம/மீராபாலிகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம் பெற்றது.
 
மட்/மம/மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் 2023.12.06 இடம் பெற்ற செயலமர்வானது பொறுப்பாசிரியர் முபீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
 
இச் செயலமர்வில் கா.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
 
இந் நிகழ்வில் தொற்றா நோய்களுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி E.உதயகுமார், பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் , மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் SPHI,PHI, தொற்றா நோய்கள் மற்றும் நீரிழிவு தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நோய்கள் தொடர்பான வைத்தியப் பரிசோதனை
 
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Fasting blood sugar, Random Blood sugar, Screening, மற்றும் BMI உடற் திணிவுச் சுட்டி ஆகிய பரிசோதனைகள் (05.12.2023) ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இப்பரிசோதனையில் 128 இற்கு  மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், SPHI, மற்றும் PHI மார்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்துகொண்டனர்.
லஞ்ச ஊழல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 2023.11.28  செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இச்செயலமர்வின் வளவாளராக பிரதேச செயலாளர் கலந்து கொண்டதுடன் நூற்றுக்கு மேற்பட்ட கள உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
இச் செயலமர்வில் ஊழல், லஞ்சம் என்றால் என்ன, ஊழல் தொடர்பான சில பொருட்கோடல், ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள், மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம்,  சர்வதேச மட்டத்தில் இனங்காணப்பட்ட ஊழலின் விளைவுகள்,ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கான தெளிவூட்டல்கள் பிரதேச செயலாளரால் தெளிவுபடுத்தப்பட்டது.
 
இந்நிகழ்விற்கு பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா,கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச கலை இலக்கிய விழாவும்   சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 2023.11.29 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
இந் நிகழ்வில் அதிதிகளாக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.சித்திக், கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
இந் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் 108 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பிரதேச கலை இலக்கிய போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வினை கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம்  தொகுத்து வழங்கியதோடு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.கோவிந்தராசா,
வீ.சந்திரகாந்தன் மற்றும் திருமதி.வ.அருணகிரிநாதன் ஆகியோர் நிகழ்விற்கான ஒருங்கிணைப்பு க்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top